Thursday, 23 June 2011 | By: Menaga Sathia

கத்திரிக்காய் பிரியாணி/ Brinjal Biryani

தே.பொருட்கள்

பெரிய கத்திரிக்காய் - 1
பாஸ்மதி - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 6
பால்(அ)தேங்காய்ப்பால் - 3 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
புதினா,கொத்தமல்லி - 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

வறுத்து பொடிக்க
ஏலக்காய் - 3
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு - 4
பிரியாணி இலை - 2

செய்முறை

*வெங்காயம்+தக்காளி நறுக்கவும்.பச்சை மிளகாயை கீறவும்.கத்திரிக்காயை நீளவாக்கில் அரியவும்.

*அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.பின் நீரில்லாமல் வடித்து 1/2 டேபிள்ஸ்பூன் நெய்யில் லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

*குக்கரில் எண்ணெய்+ 1/2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு விழுது+வறுத்து பொடித்த பொடி+கத்திரிக்காய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் உப்பு+மஞ்சள்தூள்+பால்+அரிசி+எலுமிச்சை சாறு+புதினா கொத்தமல்லி சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

பி.கு
இதற்கு உருளை வறுவல்+கேரட் அல்வா பெஸ்ட் காம்பினேஷன்.


19 பேர் ருசி பார்த்தவர்கள்:

Admin said...

கத்தரிக்காய் பிரியாணி சுவையாய் இருக்கும் என்று நிகனைக்கின்றேன்

KrithisKitchen said...

Wow.. super briyani... romba nalla irukku..http://krithiskitchen.blogspot.com
Event: Healing Foods - Banana

ஸாதிகா said...

அட கத்திரிக்காயில் பிரியாணி.அசத்துறீங்க போங்கோ.

SpicyTasty said...

looks delicious!!!

Thenammai Lakshmanan said...

கத்திரியில் பிரியாணியா.. செய்து பார்த்துறவேண்டியதுதான் மேனகா..:)

Vimitha Durai said...

Flavorful and yummy looking biryani dear...

அம்பாளடியாள் said...

ஆகா சுவையான உணவு பரிமாறிநீர்கள்
மிக்க நன்றி சகோதரி!......

Sangeetha M said...

wow...brijal briyani looks so spicy n inviting...never tried this way...supera erukku..

நிரூபன் said...

சிம்பிளான, சுவையான சமையற் குறிப்பினைத் தந்திருக்கிறீங்க...கத்தரிக்காய் பிரியாணி..இதுவரை நான் சாப்பிட்டதில்லை.
புதிய தோர் ரெசிப்பியினைத் தந்திருக்கிறீங்க.

Priya Suresh said...

Delicious and flavourful briyani, simply inviting.

Shanavi said...

Brinjal biriyani..Name sounds rhyming .. ..delicious Biriyani Menaga

சி.பி.செந்தில்குமார் said...

சைவ சமையல் டிப்ஸில் எதற்கு அசைவ முட்டை படம்? இப்படிக்கு ஏதாவது குறை கண்டு பிடித்தே பொழுதை ஓட்டுவோர் சங்கம்.. ஹா ஹா

Shylaja said...

Kathirikkai biriyani paarkve superaa iruku..
South Indian Recipes

சசிகுமார் said...

கத்தரிகாய்ல பிரியாணியா என்னேகா புது புதுசா சொல்லி கொடுத்து அசத்துறிங்க மிக்க நன்றி அக்கா.

Jayanthy Kumaran said...

unique recipe..sounds very interesting menaga..:)
Tasty Appetite

ராமலக்ஷ்மி said...

வாங்கிபாத் தெரியும். பிரியாணி புதுசு மேனகா. செய்து பார்க்கிறேன். நன்றி.

Kanchana Radhakrishnan said...

பிரியாணி புதுசு . செய்து பார்க்கிறேன்.

SpicyTasty said...

arumayana biryani.
I would like to invite you to our "Quick and easy recipe mela" and enter your recipe. We would be glad to see your participation. You can also enter this recipe if the prep time 30 minutes or less.

'பரிவை' சே.குமார் said...

பிரியாணி புதுசு. அசத்துறீங்க போங்கோ....

01 09 10