Monday 13 June 2011 | By: Menaga Sathia

பரங்கிப்பேட்டை பிரியாணி / Parankipettai Biryani

ஆசியா அக்காவின் குறிப்பை பார்த்து செய்தது.மிக நன்றாக இருந்தது.நன்றி ஆசியாக்கா!!

இந்த பிரியாணிக்கு வெள்ளை மிளகு,சோம்பு,சீரகம்,ஏலம்,பட்டை ,கிராம்பு,கசகசா சேர்த்து செய்யும் பொடிதான் முக்கியமானது.இஞ்சியை விட பூண்டு அதிகமா இருக்கவேண்டும்.

இந்த பொடியை தாள்ச்சா,மட்டன் வறுவலுக்கும் பயன்படுத்தலாம்.நான் வெள்ளை மிளகுக்கு பதில் கறுப்பு மிளகுதான் பயன்படுத்தியுள்ளேன்.

தே.பொருட்கள்
பாஸ்மதி - 4 கப்
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி  - 2 பெரியது
இஞ்சி - 1 பெரியதுண்டு
முழுபூண்டு - 2
புதினா,கொத்தமல்லிதழை - தலா 1/2 கட்டு
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தயிர் - 125 கிராம்
எலுமிச்சைசாறு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
பட்டை - 1துண்டு
கிராம்பு - 3
ஏலககய் - 3
பிரியாணி இலை - 4

வறுத்து பொடிக்க

மிளகு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 சிறுதுண்டு
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
சோம்பு - 2 டீஸ்பூன்;
சீரகம் - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்

செய்முறை

*வெங்காயம்+தக்காளி நறுக்கவும்.இஞ்சி பூண்டு அரைக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*மட்டனை சுத்தம் செய்து சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது,தயிர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+ வறுத்து பொடித்த பொடியில் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.

*பின் தக்காளி+பச்சை மிளகாய்+புதினா கொத்தமல்லி+மீதமுள்ள மிளகாய்த்தூள்+வேகவைத்த கறி  சேர்த்து வதக்கவும்.

*கறிவேகவைத்த நீரை சேர்த்து 6 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

*கொதிக்கும் போது உப்பு+அரிசி சேர்த்து வேகவிடவும்.

*நீர் சுண்டி வரும் போது நெய்யை ஊற்றி 190°C முற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.

பி.கு
எனக்கு இந்த முறையில் செய்வதுதான் நன்றாக வரும்.அவரவர் விருப்பம்போல் சாதத்தை தனியாக வடித்தும் தம் போட்டு செய்யலாம்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

Vaasan ooraye thookdhu.love it.
Veg / Fruit a month - Orange

Vimitha Durai said...

Delicious and flavorful biryani dear...

ஸாதிகா said...

அதிகம் மசால இல்லாமல் பிரியாணி அசத்தலாக உள்ளது மேனகா.

Sarah Naveen said...

that looks so yummy!!! wish i could read tamil

Chitra said...

i'm a biriyani freak .thanks for this new recipe.will definitely try this out...and let u know

Priya Suresh said...

Delicious and mouthwatering briyani, rendu plate please..

அம்பாளடியாள் said...

ஆஹா இனி எடையைக்குறைக்கிற பேச்சுக்கே
இடமில்லப் போங்கோ...சூப்பர் சாப்பாடு!.....
"மனசுக்கு எட்டினது வாய்க்கு" எட்டாமல்ப் போச்சே....
நன்றி சகோதரி பகிர்வுக்கு.

சசிகுமார் said...

எப்பவும் போல பயனுள்ள பதிவு

Thenammai Lakshmanan said...

super briyani. pasikuthu. anupungka Menka..:)

GEETHA ACHAL said...

எனக்கும் இந்த பிரியாணி ரொம்பவும் பிடித்து இருந்து மேனகா...சூப்பராக இருக்கும் பிரியாணி...

Shanavi said...

Y me ? Neenga indha biriyani senji potta , enaku naavoooratha..Super a iruku

San said...

My stomach is growling on seeing your delectable mutton biryani.

http://sanscurryhouse.blogspot.com

சிநேகிதன் அக்பர் said...

பட்டை கிராம்பு அதிகமா சேர்த்தா நெஞ்சு கரிக்காது?

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
மேலும் விபரம் அறியவும்....
இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...

Shylaja said...

Nice flavourful biriyani.Romba nalla iruku
South Indian Recipes

ஹுஸைனம்மா said...

உங்ககிட்ட எனக்குப் பிடிச்சதே இதுதான் மேனகா: எவ்வளவு கஷ்டமான சமையலா இருந்தாலும், வளவளன்னு போகாம, நறுக்குத் தெரிச்சாப்ல அஞ்சாறு ஸ்டெப்ஸ்ல செய்யச் சொல்லித் தந்திருவீங்க. பாக்கிறவங்களுக்கு, இவ்ளோ பெரிசாங்கிற மலைப்பு தோணாம, ’ரொம்ப ஈஸியா இருக்கே”ங்கிற ஃபீலிங் வந்துடும்!! நன்றிப்பா. செய்து பார்க்கணும்.

வால்பையன் said...

மிக்க நன்றி

Asiya Omar said...

மேனகா மிக்க மகிழ்ச்சி,பார்க்கவே சூப்பராக இருக்கு.

Sumi said...

Romba supera iruku.Very surprised to see recipe as my native place is parangpettai, we have all the relatives over there. Are you from around that place ?

01 09 10