Tuesday, 2 August 2011 | By: Menaga Sathia

கத்திரிக்காய் சாண்ட்விச் / Brinjal Sandwich

எப்போழுதும் ப்ரெட்டில்தான்  சாண்ட்விச் செய்து சாப்பிடுவோம்.ஒரு மாறுதலுக்காக செய்தது.
தே.பொருட்கள்

பெரிய கத்திரிக்காய் - 1
கட்லட் - 5 விருப்பமானது
கோஸ் இலைகள் - 5
தக்காளி - 1
வெள்ளரிக்காய் - 1
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - டோஸ்ட் செய்வதற்க்கு
உப்பு - தேவைக்கு

வெஜ் ஆம்லெட் செய்வதற்க்கு

கடலைமாவு - 1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
மிளகுத்தூள் 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் - தேவைக்கு

செய்முறை

*ஆம்லெட் செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து மெல்லிய தோசைகளாக ஊற்றி 2பக்கமும் வேகவைத்து தேவையானளவில் துண்டுகளாக்கவும்.

*கத்திரிக்காயை வட்டமாகவும்,சிறிது தடிமனாகவும் நறுக்கி உப்பு+மிளகுத்தூள் கலந்து தோசைக்கல்லில், வெண்ணெயில் லேசாக 2பக்கமும் டோஸ்ட் செய்யவும்.

*கோஸ் இலைகளை சிறுதுண்டுகளாகவும்,தக்காளி+வெள்ளரிக்காயை வட்டமாகவும் வெட்டவும்.

*நம் விருப்பத்திற்கேற்ப கத்திரிக்காய்+கோஸ் இலை+வெள்ளரிக்காய்+கட்லட்(அ)வெஜ் ஆம்லெட்+தக்காளி+கோஸ் இலை+கத்திரிக்காய் என அடுக்கி பரிமாறவும்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

ரொம்ப நல்லா இருக்கு....எனக்கு ரொம்ப பிடித்தது...சில சமயங்கள் பெரிய கத்திரிக்காய் வாங்கும் பொழுது செய்வதுண்டு...

ரொம்ப நாளாச்சு...செய்து பார்க்கவேண்டும்....சூப்பர்ப்....

Raks said...

கத்திரிக்காய் எனக்கு மிகவும் பிடிக்கும்,இது நல்ல ஐடியா வாக இருக்கே :) சுபெர்ப்!

Priya said...

அட... வித்தியாசமா இருக்கே:)

Vimitha Durai said...

Vithyaasama irukku. will try it out...

Lifewithspices said...

asathal superrr enakku brinjal pidikadhu but this is so good n tempting..

Shanavi said...

Hey, this is a good idea..I normally keep eggplant shallow fried inside the bread as layers..But this is different menaga..Kalakureenga ..

Sangeetha M said...

aahaa....romba vithiyasama erukke...kathirikkai sandwich nalla idea...my fav vegn will try soon :)

Chitra said...

Totally different.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

புதுசு புதுசா ரெசிபி கண்டு புடிக்கறீங்க...ஹ்ம்ம்... நானும் அப்படி தான்... ஒரே வித்தியாசம், நீங்க கண்டுபுடிக்கறீங்க... எனக்கு தானாவே ஒரு ஒரு வாட்டி செய்யரப்பவும் புதுசு புதுசா வருது...அவ்வ்வவ்வ்வ்...:)))

Nithya said...

Oh my god!! super. I thought you made some kind of filling with brinjal when I read the title. Idhu super idea va irukey :) kalakunga :)

Unknown said...

sounds interesting. Must give a try.

Cheers,
Uma

இமா க்றிஸ் said...

வித்தியாசமா இருக்கு. ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்.

ஸாதிகா said...

ரொம்ப வித்த்யாசமாக இருக்கு மேனகா.

'பரிவை' சே.குமார் said...

Differentaaa irukku...

Sudha Sabarish said...

Never heard about brinjal sandwich.Will try one day.Looks tasty.First time here.Happy to see a person blogging in tamil.

சி.பி.செந்தில்குமார் said...

ரைட்டு , நோட் டவுன் & நோட் வில்லேஜ்

Priya Sreeram said...

aaha, this is super ! nalla irukku !

Malar Gandhi said...

Quite new to me, but wud' love to try the same...you're are absolutely very innovative.

Mahi said...

வித்யாசமா இருக்கு மேனகா!

01 09 10