Tuesday 15 November 2011 | By: Menaga Sathia

கீமா மட்டர் மசாலா / Keema Mattar Masala

தே.பொருட்கள்:
கீமா - 1/4 கிலோ
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
 
செய்முறை :

*கீமாவை சுத்தம் செய்து நீரை நன்கு வடிக்கட்டிக் கொள்ளவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+தூள்வகைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*பின் கீமாவை சேர்த்து நன்கு வதக்கி உப்பு + தேவைக்கேற்ப நீர்+பட்டாணி சேர்த்து 3 விசில் வரை வேகவிடவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து நீரை வற்றவிட்டு கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

*சப்பாத்தி,நாண்,பரோட்டக்களுக்கு ஏற்றது.

13 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya Suresh said...

Can have it with anything, super delicious kheema masala..

ஸாதிகா said...

எண்ணையே அதிகம் விடாமல் சமைத்த கிரேவி பார்க்கவே அருமையாக உள்ளது மேனகா.அவசியம் சமைத்துப்பார்க்கிறேன்.

K.s.s.Rajh said...

சூப்பர்

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா இதுகூட மும்பை சப்பாத்தியை வைத்து சாப்பிட்டால், வயிறும் மனதும் நிறைந்து விடும் சூப்பர்...!!!

சசிகுமார் said...

தேங்க்ஸ் அக்கா...

சி.பி.செந்தில்குமார் said...

கீமா.. கேள்விப்படாத பெயர் தான் - கைமா பண்ணிட வேண்டியதுதான்

Asiya Omar said...

wow!super.

Sangeetha M said...

nice keema masala...mouth watering recipe...

Unknown said...

அருமையாக இருக்கு மேனகா

Shanavi said...

Last week dhaan naan seidhen, Irundhalum enaku naavoorudhu

Priya dharshini said...

Wow..super,menaga..Its been ages i had this

Mahi said...

Am seeing many recipes in keema from the last one month..ithu keema season-a? :)

I am present! ;)

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப டேஸ்ட்டி கீமா..

மனோ சொன்ன மாதிரி எங்கூர்ல இதை பாவ் கூட வெச்சும் சாப்பிடுவாங்க. ஜூப்பரா இருக்கும்.

01 09 10