Monday, 27 February 2012 | By: Menaga Sathia

தவா புலாவ்& சுகினி கேரட் பச்சடி /Tawa Pulao & Zucchini 'N' Carrot Pachadi

 மகியின் குறிப்பை பார்த்து செய்தது.நன்றி மகி!!

தவா புலாவ்

தே.பொருட்கள்
உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
நறுக்கிய காய்கள் - 1 கப் (கேரட்,பீன்ஸ்,பச்சை பட்டாணி)
பாவ் பாஜி மசாலா -2 டீஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
தக்காளி - 1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து தக்காளி+உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.

*பின் தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கியபின் காய்களை போட்டு வதக்கவும்.

*சிறிதளவு மட்டும் நீர் சேர்த்து காய்களை வேகவைக்கவும்.காய்கள் அரை வேக்காடு வெந்தால் போதும்.

*பின் சாதம் சேர்த்து கிளறி எலுமிச்சை சாறு+கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

பி.கு

*காலிபிளவர்,குடமிளகாய் சேர்த்தும் செய்யலாம்.மீதமான சாதத்திலும் செய்யலாம்.

சுகினி கேரட் பச்சடி

தே.பொருட்கள்

கேரட்,சுகினி - தலா 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்
தயிர் - 250 கிராம்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*கேரட்+சுகினியை துருவவும்.அதனுடன் பச்சை மிளகாய்+உப்பு+தயிர் சேர்த்து கிளறி சாட் மசாலாவை மேலே தூவி பரிமாறவும்.

15 பேர் ருசி பார்த்தவர்கள்:

Lifewithspices said...

one of my fav rice nice raitha..

ராஜி said...

பிள்ளைங்க லஞ்சு பாக்சுக்கு புது டிஷ் அறுமுகப்படுத்தியதற்கு நன்றிங்கோ

மனோ சாமிநாதன் said...

பாவ் பாஜி மசாலாவை உபயோகித்து வித்தியாசமான புலவாயிருக்கிற்து மேனகா! செய்து பார்க்கணும்!
பச்சடியும் சுலபமாக இருக்கிறது செய்து பார்க்க!‌

ஸாதிகா said...

புலாவும் அருமை/சாலட்டும் அருமை.

Hema said...

Very delicious, I like the raitha too, very colorful..

விச்சு said...

பச்சடி எளிமையாக இருக்கு. தவா புலாவ்ன உடனே என்ன்மோனு நினைச்சுட்டேன். நல்லா சிம்பிளா இருக்கு.

Sangeetha M said...

very tasty pulao...ncie recipe...looks too good!!
Spicy Treats
OnGoing Event:Show Me Your HITS~Healthy Delights

Mahi said...

தவா புலாவ்& ரைத்தா சூப்பரா இருக்கு மேனகா! புலாவ் செய்து பார்த்து போஸ்டும் பண்ணியதுக்கு ஸ்பெஷல் நன்றி! :)

Sangeetha Nambi said...

Looking Delicious

Raks said...

Awesome combination! Nice recipe for tawa pulao and the raita sounds too perfect!

Kitchen Boffin said...

i haven't tried anything with zucchini yet. this looks awesome!

தெய்வசுகந்தி said...

புலாவ் முதல்ல அடிக்கடி செஞ்சிருக்கேன்.நல்ல ரைத்தா

Sriya said...

You have a few awards waiting at my space. Do collect them dear..
www.sriyafood.blogspot.com

Asiya Omar said...

சூப்பர் புலாவ் & சாலட். மேனு.பார்சல் ப்ளீஸ்.

Chitra said...

Nice recipe. me too planning to post :)

01 09 10