Thursday 15 March 2012 | By: Menaga Sathia

ரோஸ் சிரப் கடல்பாசி /Rose Syrup Agar Agar

 கடல்பாசியை சைனாகிராஸ் என்றும் சொல்வார்கள்.இதில் அதிகளவு நார்ச்சத்து இருக்கு.மிகவும் குளிர்ச்சியானது.உடல் சூட்டை குறைக்கும்.ரோஸ் சிரப் சேர்த்து இந்த கடல்பாசியை முதல்முதலாக செய்தேன்.மிகவும் வாசனையுடன் நன்றாக இருந்தது.

தே.பொருட்கள்
கடல்பாசி - 5 கிராம்
தண்ணீர் - 6 கப்
சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்
ரோஸ் சிரப் - 2 டேபிள்ஸ்பூன்
பிஸ்தா,பாதாம் ப்ளேக்ஸ் - அலங்கரிக்க விரும்பினால்

செய்முறை

*ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும்.

 *நன்கு கொதித்ததும் கடல்பாசியை சேர்க்கவும்.

*அது கரைந்ததும் சர்க்கரையை சேர்க்கவும்.சர்க்கரையும் கடற்பாசியும் நன்கு கரைந்ததும் வடிகட்டவும்.
 *ஒரு தட்டில்  ரோஸ் சிரப்பை ஊற்றி பரவலாக தடவவும்.

 *பின் வடிகட்டிய கடல்பாசியை ஊற்றி அதன்மேல் பாதாம்,பிஸ்தாக்களை தூவிவிடவும்.
*ப்ரிட்ஜில் 2 மணிநேரம் வைத்து நன்கு செட்டானதும் கட் செய்து பரிமாறவும்.

15 பேர் ருசி பார்த்தவர்கள்:

Lifewithspices said...

wow such an beautiful n simple sweet.. Bookmarked..

சாருஸ்ரீராஜ் said...

colourful one. mouth watering menaga

Sangeetha Nambi said...

New one to me ! Looks perfect !

மனோ சாமிநாதன் said...

புகைப்படமும் குறிப்பும் அழகு மேனகா! கடல் பாசியுடன் பால், கண்டென்ஸ்ட் மில்க், பழ ரசம் எல்லாமே சேர்த்தும் செய்யலாம்!!

ராஜி said...

கோடைக்காலத்துக்கு பிள்ளைகளுக்கு பரிமாற நல்லதொரு பகிர்வு. நன்றி தோழி

Hema said...

Color paarthale supera irukku Menaga..

Vimitha Durai said...

Wonderful recipe. Perfect for the summer...

Yasmin said...

மேனகா ரோஸ் சிரப் கடல்பாசி கலர் பார்க்கவே செய்து சாப்பிடனும் போல் இருக்கு...வாழ்த்துக்கள்.

Asiya Omar said...

இப்படி ப்லைனாக அடிக்கடி செய்வதுண்டு.அருமை.

San said...

Unique recipe which is rich in fiber. Thanks for sharing it.

hotpotcooking said...

menaga nice variation for vegetarian. Color romba nalla iruuku

ஸாதிகா said...

கோடைக்கேற்ற குளு குளு ரெஸிப்பி.

Akila said...

That was really very good.... looks so colourful...

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

இஸ்லாமிய இல்லங்களில் நோன்புகாலங்களில் இந்த கடல் பாசி கண்டிப்பாக இருக்கும்,.
இதை விதவித்மாக செய்வோம்

கீதமஞ்சரி said...

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_18.html

01 09 10