
தே.பொருட்கள்:
சின்ன கத்திரிக்காய் - 10
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 பெரியது
பொடியாக அரிந்த தக்காளி - 4 பெரியது
வரமிளகாய்த்தூள்,தனியாத்தூள் - தலா 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - மேலே தூவ
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
அரைக்க:
வேர்க்கடலை - 1/2 கப்
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
*கத்திரிக்காயை கட் செய்து ,சிறிது எண்ணெய் சேர்த்து பிசிறி முற்சூடு செய்த அவனில் 210°C டிகிரியில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.
*கடாயில்எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+தூள் வகைகள்+உப்பு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*அனைத்தும் நன்கு வதங்கியதும் கத்திரிக்காயை சேர்த்து நன்கு கிளறி அரைத்த விழுதுகளை சேர்த்து நன்கு பிரட்டவும்.
*இறக்கும் சமயத்தில் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும்.
பி.கு
கத்திரிக்காயை எண்ணெயில் பொரிக்காமல் அவனில் க்ரில் செய்து செய்துள்ளேன்.புளிக்கு பதில் தக்காளியை நிறைய சேர்த்திருக்கேன்.இந்த முறையில் செய்வதால் எண்ணெயும் குறைவாக செலவாகும்,சுவையும் நன்றாகயிருக்கும்.

16 பேர் ருசி பார்த்தவர்கள்:
கத்திரிக்காயை பேக் செய்யவதால் எண்ணெய் குறைவு. ஆரோக்கியத்துக்கு உகந்த நல்ல குறிப்பு. நன்றி மேனகா.
My mouth is watering here after seeing the picture dead....
நல்லதொரு சைட் டிஷ்/டிரை பண்ணுகிறேன் மேனகா,
Love brinjal in all form.....
looks delicious :)
தக்காளி சேர்த்தாலே தனி டேஷ்ட்தான்.
Super side dish, looks very delicious..
Who will say no to this,really tempting me...very nice recipe...
காரக்குழம்பா?
Yummy side dish for chapathis or dosas
@ராஜி
இது காரகுழம்பு இல்லங்க..பொரியல்.அனைத்து வகை சாதத்திற்க்கும்,ரொட்டி வகைகளுக்கும் ஏற்றது...
romba nalla irukku pa.seydhu paarkiren.
yummy masala
ongoing event : http://easy2cookrecipes.blogspot.co.uk/2012/04/fruit-of-month-grapes-event_02.html
this is amazing..would love to devour now
Tasty Appetite
SUper delicious masala..
கத்திரிக்காயினை பேக் செய்து இருப்பது சூப்பர்ப்...அருமையான குறிப்பு...
Post a Comment