இந்த மாதம் Home Bakers Challenge-ல் ப்ரியா சுரேஷ் ப்ரெஞ்ச் பேக்கிங் ரெசிபிகளை கொடுத்திருக்காங்க.அதில் நான் பேக்ட் சாக்லேட் க்ரீம் செய்தேன்.இங்கு மிகவும் பிரபலமான டெசர்ட் இது.
Recipe Source : Cuisine- Facile
பரிமாறும் அளவு - 3 நபர்கள்
தயாரிக்கும் நேரம் - 15 நிமிடங்கள்
பேக்கிங் நேரம் - 30 நிமிடங்கள்
ப்ரிட்ஜில் குளிரவைக்கும் நேரம் - 120 நிமிடங்கள்
தே.பொருட்கள்
முட்டை மஞ்சள்கரு - 2
டார்க் சாக்லேட் - 50 கிராம்
ப்ரெஷ் க்ரீம் -1/2 கப்
பால் -1/4 கப்
ஐசிங் சுகர் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*பாத்திரத்தில் பால்+ப்ரெஷ் க்ரீம் சேர்த்து சூடு செய்யவும்.கொதிக்கவிடவேண்டாம்.
*மற்றொரு பவுலில் மஞ்சள் கரு+சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
*சாக்லேட்டை துண்டுகளாகிஅதில் சூடான பாலை ஊற்றி நன்கு கரையும் வரை கலக்கவும்.
*ஆறியதும் மஞ்சள் கருவில் ஊற்றி கலக்கி வடிகட்டவும்.
*அதனை பேக்கிங் செய்யும் சிறிய பவுல் அல்லது Ramekins ஊற்றி பேக்கிங் டிரேயில் வைக்கவும்.அதில் 2 கப் கொதிக்கும் நீரை ஊற்றவும்.
*அவனை 170°C சூடு செய்து 30 நிமிடங்கள் பேக் செய்யவும்.
*ஆறியதும் ப்ரிட்ஜில் 2 மணிநேரம் குளிரவைத்து பரிமாறவும்.
பி.கு
*பரிமாறும் போது மேலே விப்பிங் க்ரீம் வைத்து பரிமாறலாம்.
*பேக் செய்து எடுக்கும் போது க்ரீம் வேகாத மாதிரி இருக்கும்,ஆறியதும் கெட்டியாகிவிடும்.எனவே 30 நிமிடங்கள் வரை பேக் செய்தால் போதுமானது.
7 பேர் ருசி பார்த்தவர்கள்:
அழகாக செய்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...
Sema temptinga irukku Menaga, super..
பார்க்கவே ஆசையாக இருக்கு.சூப்பர்.
Migavum sulabamana seimurai .Anaivarum seiyalam.
Simply delicious and tempting baked chocolate..well done Menaga:)
romba supera irrukku Menaga, cute bowl...
woww attakasam da Menaka :)
Post a Comment