Wednesday 15 January 2014 | By: Menaga Sathia

சிம்பிள் வெஜ் குருமா / Simple Veg Kurma | Side Dish For Chapathi - A Guest Post By Anitha

அனிதா - இவரும் எனக்கு அறுசுவையில் அறிமுகமானவர்தான்.ஒரு முறை மெயில் செக் செய்த போது இவரிடமிருந்து மெயில் வந்தது.இவர் நான் வசிக்கும் இடத்திலிருந்து பக்கத்து ஊரில் தான் இவரும் வசிக்கிறார்.அதுமட்டுமில்லை இவருடைய புகுந்த வீடும் என்னுடைய ஊர் தான்.

அதிலிருந்து இவரிடம் போன் மூலம் பேசுவேன்.எனக்கு இதுவரை நல்ல நெருங்கிய தோழியாகவும்,ஆலோசனை வழங்கும் சகோதரியாகவும் இருந்து வருகிறார்.எங்கள் நட்பு கடந்த 7 வருடங்களாக இன்றுவரை தொடர்கிறது.எப்போழுதும் தொடரட்டும் எங்கள் நட்பு...

இவர் மட்டுமில்லாமல் இவருடைய  Co - Sister & SIL  இருவரும் எனக்கு தோழிகள் தான்.என் மகன் பிறந்திருந்த போது மருத்துவமனையில் நேரமிருக்கும் போது என்னை வந்து பார்த்துவிட்டு போவார்.இவருடைய  Co - Sister & SIL  கூட என்னை நன்கு கவனித்துக் கொண்டனர்.

அப்போழுது இவர் எனக்கு பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்க கொடுத்தார்.அவரால் தான் அந்த கதையை முழுமையாக படித்து தெரிந்துக்கொண்டேன்.இன்னும் இதுவரை அந்த புத்தகத்தினை திருப்பிக் கொடுக்கவில்லை.நானே எடுத்துக்கலாம்னு இருக்கேன்...அனிதா இந்த வரியினை படித்து அடிக்க வரதுக்குள் நான் எஸ்கேப்..

இவர் கேரளா சமையலை நன்கு சமைப்பார்.கெஸ்ட் போஸ்ட் போடுமாறு கேட்டுக்கொண்ட போது உடனே எனக்கு மெயில் செய்த குறிப்பு இது. மிக்க நன்றி அனிதா!!


இந்த குருமாவின் ஸ்பெஷலே வெங்காயம்+தக்காளி சேர்க்க தேவையில்லை.குறைவான எண்ணெயும் தான் தேவைப்படும்.தாளிக்கவும் தேவையில்லை.


தே.பொருட்கள்

காய் கலவை - 2 கப் கேரட்,பீன்ஸ்,பச்சை பட்டாணி மற்றும் உருளை
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

எண்ணெயில் வறுத்து அரைக்க

எண்ணெய் - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் -4 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் -3
இஞ்சி - 1சிறுதுண்டு
வெந்தயம் + கசகசா - தலா 1/2  டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கிராம்பு - 2
முந்திரி -5
பட்டை -சிறுதுண்டு

செய்முறை

*வறுத்தரைக்க கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெயில் வருத்து நைசாக அரைக்கவும்.


 *காய்களை குக்கரில் மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து முழ்குமளவு நீர் விட்டு  2 அல்லது 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
 *ப்ரெஷர் அடங்கியதும் அரைத்த விழுதினை சேர்த்து 5 அல்லது 7 நிமிடங்கள் வரை கொதிக்கவைத்து கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
*சப்பாத்தியுடன் சூடாக பரிமாறவும்.

பி.கு

நானும் செய்து பார்த்தேன் சூப்பரா இருந்தது.போட்டோ எடுப்பதற்குள் குருமா காலியாகிடுச்சு.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

எளிதாக உள்ளது... செய்து பார்ப்போம்... அன்புத் தோழி அனிதா அவர்களுக்கும் நன்றி...

Asiya Omar said...

நல்ல குறிப்பு. வித்தியாசமான குருமா.

மனோ சாமிநாதன் said...

வெங்காயம் தக்காளி இல்லாமல் சுலபமான குறிப்பாக இருக்கிறது! அதையும் விட புகைப்படம் சூப்பராக இருக்கிறது!

Shama Nagarajan said...

yummy simple kurma

Priya said...

UNgaluku niraiya tholigal poramayaga ullathu .Vengayam ,thakalli serkatha kuruma arumai

Priya Anandakumar said...

Lovely veg kurma, very nicely made Anitha...
By the way I love Ponniyin selvan read it the first time when I was in college ...
Eppadiyo freeya oru pokkisham kidaichiduchhu...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ருசிமிக்கப் பகிர்வுக்கு நன்றிகள்.

தங்கள் தோழிக்கும் நன்றிகள்.

Gita Jaishankar said...

Looks delicious and love the step by step by pictures....Happy Pongal to you and your family dear :)

Sangeetha M said...

wow..so easy and interesting Kurma...thanks to Anitha for this quick kurma :)

Sangeetha Priya said...

super tasty kurma, love it!!!

Unknown said...

kurma looks so tempting and yummy !!

சாரதா சமையல் said...

எளிமையான வித்தியாசமான குருமா.சூப்பர்!!!

Thenammai Lakshmanan said...

அட்டகாசம் அருமை.. :)

ADHI VENKAT said...

ருசியான குருமா... செய்து பார்க்கலாம்னு தோணுது... பாராட்டுகள் அனிதா அவர்களுக்கு..

இன்று எனது பக்கத்தில்

http://kovai2delhi.blogspot.in/2014/01/blog-post_16.html

Unknown said...

wow..so easy and interesting Kurma...thanks for the recipe

divya said...

looks yummy n delicious....

ஸாதிகா said...

சிம்பிள் குருமா உடனே செய்து பார்த்துவிடணும்.

சாராம்மா said...

Thanks menaga for the post and thanks for all for the comments.
anita

Lavanya said...

I tried the veg kuruma, it's really yummy... My 6 yr old boy liked very much...

01 09 10