இந்த பிரியாணிக்கு அரிசியை வடிக்காமல் தம் முறையில் செய்வது, வெங்காயம்+முந்திரி திராட்சை இவற்றை வறுத்து சேர்ப்பது மற்றும் பிரியாணியை தம் செய்வது இதுதான் இதில் முக்கியமானது.
பரிமாறும் அளவு - 4 நபர்கள்
சமைக்கும் நேரம் - > 1 மணிநேரம்
Recipe Source : சமைத்து அசத்தலாம்
தே.பொருட்கள்
மட்டன் - 1/2 கிலோ
நறுக்கிய வெங்காயம் - 3 பெரியது
தக்காளி - 2 பெரியது
நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லித்தழை - தலா 1/2 கப்
கெட்டி தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
ரோஸ்வாட்டர் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா -1/2 டீஸ்பூன்
நெய் - 1/4 கப்
எண்ணெய் + உப்பு = தேவைக்கு
அலங்கரிக்க
சிவற வறுத்த வெங்காயம் - 1
வறுத்த முந்திரி+திராட்சை - தேவைக்கு
சாதம் செய்ய
பாஸ்மதி - 3 கப்
முழு மிளகு -8
பிரியானி இலை -2
கிராம்பு -3
பட்டை - சிறு துண்டு
ஏலக்காய் -3
அரைக்க
இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் - 10
பச்சை மிளகாய் -3
செய்முறை
*மட்டனில் மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+1 கப் நீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரை வேகவைக்கவும்.
*பாத்திரத்தில் 4/12 கப் நீர் கொதிக்க வைத்து உப்பு+பிரியானி இலை+கிராம்பு+மிளகு+ஏலக்காய்+பட்டை +சிறிது எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும்.
*1 கப் அரிசிக்கு 1/1/2 கப் நீர் சேர்க்கவும்.
*நீர் கொதிததும் கழுவிய அரிசியை சேர்த்து வேகவிடவும். அரிசி 3/4 பதம் வெந்து இருக்கும்.
*வெங்காயம்+முந்திரி+திராட்சை வறுத்து வைக்கவும்.
*குக்கரில் எண்ணெய் விட்டு அரைத்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
*வெங்காயம்+தக்காளி +உப்பு சேர்த்து வதக்கவும்.
*பின் கரம் மசாலா+தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
*அனைத்தும் நன்கு வதக்கிய பின் தயிர்+புதினா கொத்தமல்லி சேர்க்கவும்.
*இதனுடன் வேகவைத்த மட்டனை நீரோடு சேர்த்து கொதிக்கவிடவும்.கிரேவி கெட்டியாக வந்ததும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
*இதில் பாதி கிரேவியை தனியாக எடுத்து வைத்து அதில் பாதி சாதம்+சிறிது வறுத்த வெங்காயம் +சிறிது முந்திரி திராட்சை+1/2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் +சிறிது கொத்தமல்லித்தழை +சிறிது நெய் சேர்க்கவும்.
*தோசைக்கல்லை காயவைத்து அதன்மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து சிறுதீயில் 20 நிமிடம் தம் போடவும்.
*பின் சாதத்தை உடையாமல் கிளறிவிட்டு விரும்பிய ராய்த்தா+வறுவலுடன் பரிமாறவும்.
பி.கு
*இதில் நான் ரோஸ் வாட்டர் பதில் ரோஸ் எசன்ஸ் சேர்த்து செய்துள்ளேன்.புதினா என்னிடம் இல்லாததால் கொத்தமல்லித்தழை மட்டும் 1 கட்டு சேர்த்து செய்தேன்.சுவையில் எந்த மாற்றமும் இல்லை.
13 பேர் ருசி பார்த்தவர்கள்:
சூப்பர், குக்கரிலேயே தம் செய்திட்டீங்க,அனுபவசாலிகள் எப்படி வேண்டுமானால் அசத்துவாங்க.பகிர்வுக்கு மிக்க நன்றி.
ஊருக்குப் போனப்போ பத்து நாட்கள் உங்கள் ரெசிபி சமையல்தான் வீட்டம்மா பண்ணி தந்தாங்க ஆஹா...சூப்பரோ சூப்பர், அவளும் கற்று கொண்டாள் நன்றி...!
புதிய முறையை செய்து பார்ப்போம்... நன்றி சகோதரி...
Wonderful, flavourful mutton biryani.
On-going event: South Indian cooking
Super Biryani, makes me drool...
Fantastic biryani..interesting recipe...
Nice :)
Enakku oru plate akka pls...
super tempting biryani :-)
Super Biryani.. Thanks for a recipe Menaga!!!
மிக அருமை மேனகா
அடடா அருமை...கலக்கிடீங்க...குக்கரில் வெயிட் போடனுமா வேண்டாமா ? ரொம்ப நல்லா வந்து இருக்கு .
@Snow White
தம் போடும் போது குக்கர் வெயிட் போட தேவையில்லை.சிறுதீயில் 20 நிமிடம் மூடி தம் போட்டால் போதும்.
Post a Comment