சிந்தி சமையல் - பாகிஸ்தான் மற்றும் சிந்து இரண்டும் சேர்ந்து கலந்தது.வெஜ் மற்றும் நான் வெஜ் சமையல் இரண்டும் கலந்தது.
இதில் நான் சமைத்திருப்பது சாதம்,சப்பாத்தி, டால் பாலக், ஸ்பைசி உருளை வறுவல் மற்றும் டிரை ஸ்வீட் கோதுமை மாவு
டால் பாலக் / Dal Palak
Recipe Source : Cook With Love
இதன் ஸ்பெஷல் தயிர் மர்றும் இஞ்சி சேர்ப்பது தான்...
தே.பொருட்கள்
பாசிபருப்பு - 1/4 கப்
பொடியாக நறுக்கிய ஸ்பினாச் -3/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் -2
பூண்டுப்பல் -5
இஞ்சி -சிறியதுண்டு
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் -1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
தயிர் - 1/8 கப்
எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*குக்கரில் பாசிபருப்பு+வெங்காயம்+பூண்டுப்பல்+இஞ்சி+பச்சை மிளகாய் +மஞ்சள்தூள்+முழ்குமளவு நீர் சேர்த்து வேகவிடவும்.
*பருப்பு வெந்ததும் கீரை சேர்த்து வேகவிடவும்.ஆறியதும் தயிரை கடைந்து பருப்பு கலவையில் ஊற்றவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி தனியாத்தூள்+வரமிளகாய்த்தூள் சேர்த்ததும் பருப்பு கலவை +தேவையான நீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவைத்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
ஸ்பைசி உருளைகிழங்கு வறுவல்/ Spiced Potatoes
Recipe Source : Cookwithlove
ஒரிஜினல் ரெசிபியில் ஸ்வீட் உருளையில் செய்திருந்ததை சாதாரண உருளையில் செய்துருக்கேன்.
தே.பொருட்கள்
துண்டுகளாகிய உருளை - 2 பெரியது
சீரகப்பொடி -1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி -1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பொடியாக நருக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
செய்முறை
*கடாயில் எண்ணெய் விட்டு அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்ததும் உருளை+உப்பு சேர்த்து மூடி போட்டு சிறுதீயில் வேகவிடவும்.
*வெந்ததும் கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.
டிரை ஸ்வீட் கோதுமை மாவு - Churi / Dry Sweet Wheat Flour
Recipe Source : Simply Sindhi Recipes
சத்யநாராயண பூஜையின் போது பிரசாதமாக செய்யப்படும் இனிப்பு இது.
தே.பொருட்கள்
கோதுமைமாவு - 1/4 கப்+1/8 கப்
நெய் -1/8 கப்
சர்க்கரை - 1/8 கப்
செய்முறை
*கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கோதுமை மாவு போட்டு சிறு தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.
*மாவு நன்கு ஆறியதும் சர்க்கரை கலந்து பரிமாறவும்.
பி.கு
*மாவு நன்கு ஆறிய பிறகே சர்க்கரை சேர்க்க வேண்டும் இல்லையெனில் சீரா போல் ஆகிவிடும்.
*விரும்பினால் இதில் சர்க்கரை சேர்க்கும் போது வேர்கடலை மற்றும் நறுக்கிய பேரிச்சம்பழ துண்டுகள் சேர்க்கலாம்.
7 பேர் ருசி பார்த்தவர்கள்:
very interesting thali.. can u pls. pass me?
வணக்கம்
சுவையான சமயல் முறை... மிக அழகாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். பசிதான் எடுத்து சாப்பிட முடியாது.பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Yummy Plate :)
Inviting platter.. love the dal much..
tats a yummy spread..
What a delicious looking platter, everything looks so good :)
Semaiya irruku Menaga, i would love to give a try to that dry sweet wheat flour.
Post a Comment