Friday 26 September 2014 | By: Menaga Sathia

3 வண்ண குடமிளகாய் சீஸ் பராத்தா/ TRICOLOUR CAPSICUM CHEESE PARATHA | KIDS LUNCHBOX RECIPES

இந்த குடமிளகாய் சீஸ் பராத்தா மிகவும் சுவையாக இருக்கும்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க.ஒரு முறை குடமிளகாய் நாண் சாப்பிட்டேன்,ரொம்ப சுவையா இருந்தது.அதே போல் பராத்தாவில் செய்துருக்கேன்.

ஸ்டப்பிங்கில் சீஸ்+குடமிளகாய் சமமாக சேர்க்கவேண்டும். ஏதாவது ஒன்று குறைவாக சேர்த்தாலும் நன்றாக இருக்காது. இதில் குடமிளகாயை மிக பொடியாக நறுக்க வேண்டும்,இல்லையெனில் உருட்டும் போது ஸ்டப்பிங் வெளியே வந்து விடும்.

எப்போழுதும் ஸ்டப்பிங் பராத்தாவில்,ஸ்டப்பிங் வைத்து மூடிய பிறகு அதனை அடிப்பக்கம் வைத்து உருட்டினால் ஸ்டப்பிங் வெளியே வராது.


நான் இதில் 3 கலர் குடமிளகாய் சேர்த்து செய்துருக்கேன்.ஏதாவது ஒரு கலரில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப செய்யலாம்.

தே.பொருட்கள்

கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்+சுடுவதற்கு

ஸ்டப்பிங் செய்ய

பொடியாக நறுக்கிய குடமிளகாய் -1/2 கப்
துருவிய சீஸ் -1/2 கப்
சீரகபொடி -1/4 டீஸ்பூன்
கரம் மசாலா -1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

சீஸில் உப்பு இருக்கும்,அதனல் உப்பின் அளவை பார்த்து சேர்க்கவும்.

செய்முறை

*ஸ்டப்பிங் செய்ய கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

 *கோதுமை மாவில் உப்பு+1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
 *பின் சிறு உருண்டைகளாக எடுத்து லேசாக  மாவினை தேய்க்கவும். அதில் 1 டேபிள்ஸ்பூன் அளவு ஸ்டப்பினை வைக்கவும்.
 *அதனை அப்படியே மேல் நோக்கி மடிக்கவும்.மடித்த பாகத்தினை அடிப்பக்கம் வைத்து மாவினை லேசாக தேய்க்கவும்.

 *சூடான தவாவில் போட்டு 2 பக்கமும் எண்ணெய் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்
 *இதனை அப்படியே சாப்பிடவும் நன்றாக இருக்கும்.விரும்பினால் தயிர் தொட்டு சாப்பிடலாம்.

Sending to Kids lunch box recipes at Indusladies

14 பேர் ருசி பார்த்தவர்கள்:

Sangeetha M said...

such a yummy and filling paratha, perfect kids lunch box recipe Menaga!

Magees kitchenworld said...

Just Recently i tasted this cheese paratha, God! I just love it...YUM!

nandoos kitchen said...

nice and healthy parathas..

Thenammai Lakshmanan said...

சூப்பரோ சூப்பர்டா மேனகா. எனக்கு 4 போடு :)

sangeetha senthil said...

asaththitinga ...

Anonymous said...

best for breakfasts love it

வல்லிசிம்ஹன் said...

ஆஹா,நல்ல ருசியா இருக்கும் போலத் தெரிகிறது.மிக நன்றி மேனகா.உழைத்துச் செய்யும் எதுவும் பரிமளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

'பரிவை' சே.குமார் said...

படங்களுடன் குறிப்பு அருமை...
வாழ்த்துக்கள் அக்கா...

Priya said...

Colorful PARATHA ..yUMMY

Sangeetha Priya said...

healthy n filling paratha!!!

priyasaki said...

இப்பதானே பார்த்தேன் மேனகா. சூப்பரா இருக்கு. ஈசியாகவும் இருக்கு.செய்வேன் கண்டிப்பாக.

Jayanthy Kumaran said...

wow...u come up with lovely recipes Menaga

இளமதி said...

அஞ்சு தன் வலையில் இந்தப் பராத்தா செய்ததைப் பற்றிச் சொல்லியவுடன் வந்தேன். அருமை!
உண்மையில் நன்றாக இருக்குமெனத் தோணுகிறது. செய்து பார்க்கின்றேன்.

நன்றி மேனகா!

ஸ்ரீராம். said...

அருமை. ஒருமுறை முயற்சித்து விடலாம்.

01 09 10