Thursday, 23 April 2015 | By: Menaga Sathia

மோர் மிளகாய் / MOR MILAGAI | SUN DRIED CHILLIES | SUMMER SPL

print this page PRINT IT

மோர் மிளகாய் தயிர் சாதம் மற்றும் பழைய சாதத்திற்கு ஏற்ற பக்கஉணவு.மிளகாயை சாதம் வடித்த தண்ணியில் சூடாக ஊற்றி 10 நிமிடம் வைத்திருந்து பின் நாம் செய்தால் மிளகாயின் நிறம் மாறாது மற்றும் காரமும் குறைவாக இருக்கும்.

இதனை பொதுவாக தஞ்சாவூர் குடமிளகாயில் செய்வாங்க.அதில் காரம் குறைவு,சுவையும் சூப்பர்.நான் சாதரண ஊசிமிளகாயில் செய்துருக்கேன்.

தே.பொருட்கள்

பச்சை மிளகாய் -30
நன்கு புளித்த மோர் -2 கப்
உப்பு -தேவைக்கு

செய்முறை

*மிளகாயின் காம்போடு பயன்படுத்தலாம்.மிளகாயின் நடுவில் கம்பியால் குத்தவும் அல்லது மூங்கில் குச்சியில் கூட குத்தலாம்.

*அதனை சாதம் வடித்த தண்ணியில் சூடாக ஊற்றி 10 நிமிடம் வைக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் மோரினை உப்பு சேர்த்து கடைந்து வைக்கவும்.மிளகாயை சாதம் வடித்த தண்ணியிலிருந்து எடுத்து மோரில் 1 நாள் முழுக்க ஊறவைக்கவும்.
*ஊறியன் பின் தட்டில் மிளகாயை மட்டும் எடுத்து வெயிலில் காயவைக்கவும்.

*மாலையில் திரும்பவும் மோரில் போட்டு வைக்கவும்.

*இதே போல் மோர் வர்றும் வரை செய்த பின் திரும்பவும் 1 நாள் முழுக்க காயவைக்கவும்.

*இது வருடம் முழுக்க வைத்திருந்து பயன்படுத்தலாம்.

*உபயோகிக்கும் போது எண்ணெய் நன்கு காயவைத்து மிளகாயை வறுத்து பயன்படுத்தவும்.


பி.கு

*மிளகாய் வறுக்கும் போது நன்கு பொன்னிறமாக வறுத்தால் தான் சாப்பிடும் போது காரம் தெரியாது.

*மிளகாயை மோரிலிருந்த எடுத்து காயவைக்கும் போது மோரினை வெயிலில் காயவைக்ககூடாது.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

கவிஞர்.த.ரூபன் said...

வணககம்
செய்முறை விளக்கத்துடன் நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015:  

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

Very usefull post for summer ménaga.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மோர் மிளகாய் வறுத்தால், சூப்பர் டேஸ்ட் ஆக இருக்குமே ! :)

பயனுள்ள கோடைகாலப் பகிர்வுக்கு நன்றிகள்.

01 09 10