PRINT IT
இது ஒரு பஞ்சாபி உணவு வகை.இதனை க்ரில் செய்து முடித்ததும் வெண்ணெய்/எண்ணெய் தடவி பரிமாறலாம்.நான் எண்ணெய்/வெண்ணெய் தடவாமல் பரிமாறியுள்ளேன்.எல்லாம் நம் விருப்பம்தான்
தே.பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன்-1/4 கிலோ
தயிர்- 2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
எலுமிச்சை சாறு -2 டீஸ்பூன்
அரைக்க
புதினா +கொத்தமல்லி- தலா 1 கைப்பிடி
பச்சை மிளகாய்- 2 (அ) காரத்திற்கேற்ப
இஞ்சி -சிறிய துண்டு
பூண்டுப்பல்- 2
மிளகு- 3
செய்முறை
*சிக்கனை சுத்தம் செய்து நடுத்தர துண்டுகளாகி,நீரில்லாமல் வடிக்கவும்.
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைக்கவும்.
*க்ரில் செய்வதற்கு முன் சிக்கனை ப்ரிட்ஜிலிருந்து 1/2 மணிநேரத்திற்கு முன்பாக எடுத்து வைக்கவும்.
*அவனை 210°C முற்சூடு செய்யவும்.
*மூங்கில் குச்சியினை 1 மணிநேரம் ஊறவைத்த பின் சிக்கனை மூங்கில் குச்சியில் சொருகி 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
*இதனை சாலட் / டிப்(Dip) உடனோ அல்லது அப்படியே கூட பரிமாறலாம்.
3 பேர் ருசி பார்த்தவர்கள்:
பாக்க நல்லாத்தான் இருக்கு...
இப்படி பொறுமையாச் சமைச்சு சாப்பிட ஊருக்குத்தான் வரணும்...
ஊருக்கு வரும் போது மனைவியிடம் சொல்லிச் செய்து சாப்பிடலாம்...
சகோதரி... தொடர்கதை படிக்கிறது நாலு பேர்ல நீங்க ஒரு ஆளு... ஆனா ஆளையே காணாமே...
வணக்கம்
சுவையான உணவு பற்றி செய்முறை விளக்கத்துடன் சொல்லியுள்ளீர்கள் நிச்சயம் வீட்டில் செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
மிக அருமை , நானும் அடிக்கடி செய்வேன்..
Post a Comment