Thursday, 3 September 2015 | By: Menaga Sathia

மா லாடு/பொட்டுக்கடலை உருண்டை | MAA LADOO(POTTUKADALAI URUNDAI) | GOKULASTAMI RECIPES

print this page PRINT IT
பொட்டுக்கடலையில் ப்ரோட்டீன் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.மிகுந்த சுவையுடையதும் கூட..

இந்த அளவில் 10 உருண்டைகள் வரும்.

தே.பொருட்கள்

பொட்டுக்கடலை -1 கப்
சர்க்கரை- 1/2 கப்
ஏலக்காய் -2
நெய் -1/4 கப்
நெய்யில் வறுத்த முந்திரி- 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*பொட்டுக்கடலையை நைசாக பொடித்துக் கொள்ளவும்.

*சர்க்கரையுடன் ஏலக்காய் விதை மட்டும் சேர்த்து நைசாக பொடிக்கவும்.

*பொட்டுக்கடலை மாவு+பொடித்த சர்க்கரை+வறுத்த முந்திரி சேர்த்து கலந்து,நெய்யை நன்கு சூடு செய்து மாவில் கலக்கவும்.





*சூடாக இருக்கும் போதே லட்டுகளாக பிடிக்கவும்.

பி.கு

*ஏலக்காயின் தோலை தூக்கி எரியாமல் டீத்தூளில் கலந்து வைக்கலாம் அல்லது குடிக்கும் தண்ணீரில் போட்டு வைத்து குடித்தால் தீர்த்தம் குடிப்பது போலவே இருக்கும்.


1 பேர் ருசி பார்த்தவர்கள்:

'பரிவை' சே.குமார் said...

இது எங்கள் வீட்டில் செய்வதுண்டு...

01 09 10