
நெய் கொழுக்கட்டையை ரவை அல்லது மைதாவில் செய்வாங்க.நான் ரவையில் செய்துருக்கேன்.
இந்த நெய் கொழுக்கட்டையை கணபதி ஹோமம் அல்லது சங்கடஹர சதுர்த்தி அன்று செய்வார்கள்.
பொதுவாக இதனை கணபதி ஹோமத்துக்கு முதல் நாளே செய்து பயன்படுத்துவாங்க.இதனை குறைந்தது 10 நாட்கள் வரை வைத்து காற்றுபுகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
ரவையில் செய்வதாக இருந்தால் மெல்லிய ரவையில் செய்ய வேண்டும்.
பெயருக்கேற்றார்போல் இதனை நெய்யில் பொரிக்க வேண்டும்.அதற்கு பதில் எண்ணெயிலும் பொரிக்கலாம்.
Recipe Source : Here
தே.பொருட்கள்
மெல்லிய ரவை -1/2 கப்
உப்பு -1 சிட்டிகை
பால்- 1/4 கப்+1 டேபிள்ஸ்பூன்
நெய்- 2 டீஸ்பூன்
எண்ணெய்/நெய் -பொரிக்க
பூரணத்திற்கு
தேங்காய்த்துறுவல்- 1 கப்
வெல்லம் -1/2 கப்
ஏலக்காய்த்தூள்- 1/4 டீஸ்பூன்
செய்முறை
*ரவையில் உப்பு கலந்து பால் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
*பிசைந்த மாவினை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் நெய் தொட்டு மாவினை நன்கு பந்துபோல மிருதுவாக பிசையவும்.
*பூரணம் செய்ய,வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.
*பின் மீண்டும் வெல்லநீரை கொதிக்கவைத்து தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறி ஆறவைக்கவும்.
*மாவினை பெரிய உருண்டைகளாக எடுக்கவும்.
*ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி போல மெலிதாக தேய்த்து சிறு வட்ட வடிவ மூடியினால் வெட்டிக் கொள்ளவும்.
*அதில் 1 டீஸ்பூன் அளவு பூரணம் வைத்து அப்படியே மேல் நோக்கி அழுத்தி மூடவும்.இப்போழுது குட்டி மோதகம் போல இருக்கும்.
*இப்படியே அனைத்தையும் செய்து முடித்த பின் நெய்/எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
பி.கு
*அனைத்து மோதகங்களை செய்து முடித்த பின் காயாமல் இருக்க பேப்பர் போட்டு மூடி வைக்கவும்.
1 பேர் ருசி பார்த்தவர்கள்:
wow! this nei Kozhukattai sounds very interesting.. looks very tasty too
Post a Comment