PRINT IT
உஷாராணியை எனக்கு ப்ளாக் மூலமாகதான் தெரியும்.அவரின் ஆந்திரா குறிப்புகள் அனைத்தும் நன்றாக இருக்கும்.அதே போல் நிறைய பேக்கிங் குறிப்புகளையும் அவரின் வலைப்பூவில் பகிர்ந்துள்ளார்.
அவரின் வலைப்பூவில் கெஸ்ட் போஸ்ட் போடுமாறு கேட்டபோது நானும் சிறிது தாமதத்திற்கு பிறகே இந்த குறிப்பினை அனுப்பினேன்.அவரின் வலைப்பூவில் ஆங்கிலத்தில் இருக்கும்.எனக்கொரு வாய்ப்பினை அளித்த உஷாவிற்கு நன்றி !!
என்னுடையது தமிழ் என்பதால் மறுபடியும் குறிப்பினை இங்கே மிக தாமதமாக பகிர்கிறேன்.
தே.பொருட்கள்
மைதா- 1/2 கப்
எண்ணெய் -1 டீஸ்பூன்+பொரிக்க
உப்பு- 1 சிட்டிகை
பால்- 3 கப்
சர்க்கரை- 1/3 கப்
ஏலக்காய்த்தூள்- 1/4 டீஸ்பூன்
குங்குமப்பூ -சிறிது
பிஸ்தா பருப்பு -அலங்கரிக்க
செய்முறை
*மைதா+உப்பு+1 டீஸ்பூன் எண்ணெய் இவற்றை பவுலில் போட்டு பிசைந்து பின் தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாக பிசைந்து 1/2 மணிநேரம் வைக்கவும்.
*பாத்திரத்தில் பாலை ஊற்றி 3/4 பாகம் வற்றும் வரை காய்ச்சவும்.
*வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும்.
*பால் நன்றாக காய்ந்த பின் குங்குமப்பூ+ஏலக்காய்த்தூள்+சர்க்கரை சேர்க்கவும்.
*இந்த பாலினை அகலமான பாத்திரத்தில் ஊற்றவும்.
*ஊறிய மைதா மாவில் சிறு சம உருண்டைகளாக எடுக்கவும்.
*இதனை மெலிதான சிறு பூரிகளாக தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*பொரித்த பூரிகளை லேசாக மடித்து பாலில் ஊறவிடவும்.
*பரிமாறும் போது பிஸ்தாதுண்டுகளை சேர்த்து குளிரவைத்து பரிமாறவும்.
பி.கு
*பூரிகளை பொன்னிறமாக பொரிக்க வேண்டாம்.
*பூரிகள் பாலில் குறைந்தது 1/2 மணிநேரமாவது ஊறவைக்கவும்.
2 பேர் ருசி பார்த்தவர்கள்:
Nice guest post.. This looks amazing
உங்களைப் பற்றிய சில விவரங்களை உடனே அனுப்புமாறு அன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறோம். இது வலைப்பதிவர் விழா! வலைப்பதிவர்களே திரண்டு வாருங்கள்!
http://thaenmaduratamil.blogspot.com/2015/09/Tamil-bloggers-list-2015-handbook.html
Post a Comment