PRINT IT
இந்த கேக்கினை கொடுத்துள்ள பொருட்களை அளவுபடி செய்தால் நன்றாக வரும்.
Recipe Source :Addapinch
தே.பொருட்கள்
பாகம் 1
மைதா- 2 கப்
சர்க்கரை -2 கப்
கோகோ பவுடர் -3/4 கப்
பேக்கிங் பவுடர் -2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா- 1 1/2 டீஸ்பூன்
உப்பு- 1/2 டீஸ்பூன்
இன்ஸ்டண்ட் காபிதூள் -1 டீஸ்பூன்
பாகம் 2
பால்/பட்டர்மில்க் -1 கப்
வெஜிடபிள் எண்ணெய்- 1/2 கப்
முட்டை -2
வெனிலா எசன்ஸ் -2 டீஸ்பூன்
வெந்நீர்- 1 கப்
செய்முறை
*பாகம் 1 ல் கொடுக்கபட்டுள்ள பொருட்களை ஒன்றாக கலந்து 3 முறை சலிக்கவும்.
*பாகம் 2ல் கொடுக்கபட்ட பொருட்களில் வெந்நீர் தவிர மீதியுள்ள பொருட்களை பாகம் 1ல் கொடுத்துள்ள பொருட்களில் கலக்கவும்.
*கடைசியாக வெந்நீர் சேர்த்து கலக்கவும்.
*வெண்ணெய் தடவி பேக்கிங் டிரேயில் ஊற்றி முற்சூடு செய்த அவனில் 180° C 50- 55 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
*ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.
பி.கு
*பட்டர்மில்க் செய்ய 1 கப் பாலில் 1 டேபிள்ஸ்பூன் வெள்ளை வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி 15 நிமிடங்கள் வைத்தால் பட்டர்மில்க் ரெடி.
4 பேர் ருசி பார்த்தவர்கள்:
வணக்கம்
செய்முறை விளக்கத்துடன் அசத்தியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாவ் சூப்பர்...
ஆமா கிரைம் கதை எழுதச் சொல்லி மாட்டி விட்டுட்டு நான் அங்கிட்டு முழிச்சிகிட்டு நிக்கிறேன்.... சகோதரியைக் காணோம்...
yummy cake
Tasty cake for kidz
Post a Comment