Wednesday 9 March 2016 | By: Menaga Sathia

பாதாம் புதினா சிக்கன் /Badham Pudhina Chicken (Almond Mint Chicken ) | Chicken Recipes


நாண் ,நெய் சாதம்,புலாவ் ,சப்பாத்தி இவற்றிற்கு நன்றாக இருக்கும்...

Recipe Source : Here

தே.பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 5
பாதாம் -20
தயிர் -1/2 கப்
நெய் - 5 டேபிள்ஸ்பூன்
கெட்டி தேங்காய்ப் பால் -  1 கப்
புதினா - 1 கைப்பிடி
உப்பு - தேவைக்கு

அரைக்க

இஞ்சி - சிறு துண்டு
பூண்டுப்பல் - 10
ஏலக்காய் - 3
பட்டை - சிறிது
காய்ந்த மிளகாய் - 6
மிளகு - 1 டீஸ்பூன்

செய்முறை

*சிக்கனை சுத்தம் செய்து 1/2 மணிநேரம் தயிரில் ஊறவைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.பாதாமை வெந்நீரில் ஊறவைத்து,தோலுரித்து விழுதாக அரைக்கவும்.

*ஊறவைத்த சிக்கனை குக்கரில் 3 விசில் வரை வேகவைக்கவும்.

*கடாயில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்+அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் தேங்காய்ப்பால் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

*பின் வேகவைத்த சிக்கன்+பாதாம் விழுது+உப்பு சேர்த்து அடிபிடிக்காமல் மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.

*5 நிமிடம் கழித்து புதினாவை தூவி இறக்கவும்.

2 பேர் ருசி பார்த்தவர்கள்:

MANO நாஞ்சில் மனோ said...

நீங்க ஏன் குடும்பத்தோடு பஹ்ரைன் வந்துரப்டாது ?

'பரிவை' சே.குமார் said...

ஆஹா... இப்பவே பசிக்குது...

@மனோ அண்ணா... பேசாம அவங்களை அபுதாபி பக்கமா வரச்சொல்லுங்கண்ணே.... நல்ல சாப்பாடா சாப்பிடலாம் போல... நாமளே செஞ்சி நாமளே சாப்பிட்டு அலுத்துப் போச்சுண்ணா...

01 09 10