Monday 13 April 2009 | By: Menaga Sathia

சிக்கன் மசாலா ப்ரை


தே.பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
புதினா - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவையான அளவு

எண்ணெயில் வறுத்தரைக்க:

தனியா - 2 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 கப்

தாளிக்க:
பிரிஞ்சி இலை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பட்டை - சிறு துண்டு

செய்முறை:

*சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும்.

*வறுக்க குடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும்.

*வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

*வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+அரைத்த மசாலா+புதினா ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் சிக்கன்+உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு வேக வைக்கவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

*சிக்கன் தண்ணீர் விடும்,தண்ணீர் சுண்டும் வரை நன்கு பொன்முறுவலாக சேர்த்து கிளறி இறக்கவும்.

5 பேர் ருசி பார்த்தவர்கள்:

Anonymous said...

அளவு டேபில் ஸ்பூனில் உள்ளவைகள் சரிதானா, 1/2 கிலோ கோழி கறிக்கு இவைகள் அதிகம் போல, அதுவும் இஞ்சி பூண்டு விழுது அதிகம் போல தெரிகின்றதே, விளக்குங்களேன்.

பனிமலர்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ரொம்ப எளிதா இருக்கே!
நன்றி!

Menaga Sathia said...

பனிமலர் இந்த அளவில் தான் உபயோகித்தேன்.காரம் சரியாக இருந்தது. கொஞ்சம் மசாலா அதிகமா இருந்தால் தான் நன்றாக இருக்கும்.தங்களுக்கு அதிகமாக இருந்தால் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.அசைவ உணவுக்கு இஞ்சி பூண்டு அதிகமா சேர்த்தால் நன்றாக இருக்கும்.நான் எப்போழுதும் அவைகளை அதிகமாக தான் போடுவேன்.வாடையும் வராது,சீக்கிரம் செரித்து விடும்.இந்த அளவில் செய்துப் பாருங்கள் நன்றாக இருக்கும்.

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி ஜோதிபாரதி!!

Sangeetha M said...

this is very easy n yummy recipe...i never tried chicken with fresh masala(dry chilli,coriander seeds..) recipe paarkkave aasaiya erukku..kandippa intha weekend try panna poren:)

01 09 10