Thursday 16 April 2009 | By: Menaga Sathia

மீன் குழம்பு


தே.பொருட்கள்:

மீன் - 8 துண்டுகள்
புளி - 1எலுமிச்சை பழ அளவு
கலந்த மிளகாய்த்தூள் - 11/2 டேபிள்ஸ்பூன்
தக்காளி - 1
கத்திரிக்காய் - விருப்பதிற்கேற்ப
மாங்காய் - 4 துண்டுகள்
உப்பு + எண்ணெய் = தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிது

நசுக்கிக் கொள்ள:

சின்ன வெங்காயம் - 8
பூண்டு பல் - 5
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

தாளிக்க:

வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* மீனை சுத்தம் செய்துக் கொள்ளவும்.

*தக்காளியை அரைத்துக்கொள்ளவும்.

* புளியை ஒரு கோப்பையளவு கரைத்து உப்பு+மிளகாய்தூள்+அரைத்த தக்களி விழுது சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.

*நசுக்க வேண்டிய பொருட்களை நசுக்கிக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து,நசுக்கிய பொருள்+கத்திரிக்காய் போட்டு வதக்கவும்.

*பின் வதங்கியதும் புளி கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும்.

* கொதித்ததும் மீன்+மாங்காய் துண்டுகளை
போட்டு நன்கு கொதித்த பின் மல்லித்தழை தூவி இறக்கவும்.






5 பேர் ருசி பார்த்தவர்கள்:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இது எந்தப் பகுதி மீன் குழம்பு. தேங்காய்ப் பால் சேர்ப்பதில்லையா??

Menaga Sathia said...

யோகன் பாரிஸ்,இது பாண்டிசேரி சேர்ந்த குழம்பு.தேங்காய்பால் சேர்ப்பதில்லை.வேண்டுமானால் கடைசியாக தேங்காயை அரைத்து ஊற்றுவோம்.

malar said...

வடகம் 1 டேபிள் ஸ்போன் போட்டிருகிரேங்க அது என்ன?
?

Asiya Omar said...

அருமை.உடன் செய்து பார்க்க தோணுகிறது.

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

01 09 10