Monday, 25 May 2009 | By: Menaga Sathia

தவலை அடை/Thavala Adai

தே.பொருட்கள்:

வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
சோம்பு - 11/2 டீஸ்பூன்
தேங்காய்ப் பல் - 1/4 கப்

ஊறவைக்க:

அரிசி - 1 1/2 கப்
கடலைப் பருப்பு - 3/4 கப்
காய்ந்த மிளகாய் -3

தாளிக்க:

கறிவேப்பில்லை -சிறிது
கடுகு - 1டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவையானளவு

செய்முறை:

*ஊறவைக்க குடுத்துள்ள பொருட்களை 3/4 மணிநேரம் ஊறவைத்து சோம்பு+உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாயை பொடியாக அரியவும்.

*வாணலில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி,அரைத்த மாவில் தேங்காய்ப் பல் சேர்த்து கொட்டி கலக்கவும்.

*கடாயில் எண்ணெய் நிறைய ஊற்றி மாவை அடையாக ஊற்றவும்.ரொம்ப மெல்லியதாக ஊற்றக்கூடாது.

*வெந்ததும் திருப்பி போட்டு இன்னும் நிறைய எண்ணெய் ஊற்றி சுற்றெடுக்கவும்.

*அப்படியேவும் இந்த அடையை சாப்பிடலாம் இல்லையென்றால் தேங்காய் சட்னியுடன் விரும்பினால் சாப்பிடலாம்.

பி.கு:இந்த மாவை அரைத்தவுடன் சுடவும்,புளித்துவிட்டால் நன்றாக இருக்காது.







5 பேர் ருசி பார்த்தவர்கள்:

நட்புடன் ஜமால் said...

சிறு வயது முதல் இதனை ரொம்ப விரும்பி சாப்பிடுவேன்.

என் சிறிய தந்தை வாங்கி கொடுப்பாங்க.

புகை வண்டியில் போகும் போது இரசிச்சி சாப்பிடுவென்.

Menaga Sathia said...

வாங்க ஜமால் ரொம்பநாள் கழித்து நம்ம ப்ளாக்பக்கம் வந்திருக்கிங்க.எனக்கும் இது ரொம்ப பிடிக்கும்.எங்கம்மா அடிக்கடி செய்து குடுப்பாங்க.சும்மா 2 அடை சாப்பிட்டாலே போதும் வயிறு நிறைந்திடும்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!

Unknown said...

இந்த அடை நான் சின்ன பிள்ளையில் அம்மா கையில் சாப்பிட்டது. ரொம்ப நல்ல தெளிவாக விளக்கம் சொல்லியிருக்கின்க மேனகா

Menaga Sathia said...

எனக்கு எப்பலாம் இந்த அடை சாப்பிடத் தோனுதோ அப்போ உடனே செய்து சாப்பிடுவேன்பா,நன்றி பாயிசா!!

Anonymous said...

கொஞ்சம் அனுப்பி வைக்கிறீங்களா?

01 09 10