Thursday, 11 June 2009 | By: Menaga Sathia

ஸ்பானீஷ் ஆம்லெட்/Spanish Omlette

தே.பொருட்கள்:

முட்டை - 3
உருளைக்கிழங்கு - 1
கொத்தமல்லித்தழை -சிறிது
நறுக்கிய குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
நறிக்கிய வெங்காயத்தாள் - 1 1 /2 டேபிள்ஸ்பூன்
கேரட் - 1 சிறியது
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1சிட்டிகை
நறுக்கிய வெங்காயம் - 1டேபிள்ஸ்பூன்
செய்முறை:

*முட்டையை உடைத்து நன்கு அடித்து அதில் மிளகுத்தூள்+சோம்புத்தூள்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

*உருளை+ கேரட் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+உருளை+கேரட் லேசாக வதக்கவும்.இறக்கும் போது கொத்தமல்லித்தழை+வெங்காயத்தாள்+குடமிளகாய் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விடவும்.

*ஆறியபின் அதனை முட்டை கலவையில் கொட்டி ஆம்லெட்டாக சுட்டெடுக்கவும்.

பி.கு:
காய்கறி சாப்பிடாத குழந்தைகளுக்கு இதுபோல் செய்து குடுக்கலாம்.



5 பேர் ருசி பார்த்தவர்கள்:

சென்ஷி said...

இதை மாத்திரம் தைரியமா பக்கத்துல இருக்குற ஹோட்டல்ல செஞ்சு பார்க்கலாம். நன்றி :)))

Anonymous said...

அன்புள்ள நண்பர்களே

இவ்வார தமிழர் பட்டையை இணைத்தற்க்கு மிக்க நன்றி

உங்களது பிளாக் பெயரையை இவ்வார பட்டையை இணைத்தவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டோம்.

உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்.காம்

Anonymous said...

தற்போது அந்த இவ்வார பட்டையை பார்க்க முடியவில்லை, நீங்களும் இவ்வார தமிழரா இருக்கும் போது எல்லா தளதிற்க்கும் உங்களது பிளாக் தெரியவரும்

நன்றி
தமிழர்ஸ்

Jaleela Kamal said...

மேனகா இந்த ஸ்பானிஷ் ஆம்லேட் இன்று செய்தேன் ரொம்ப நல்ல வந்தது.

உருளை கிழங்குக்கு பதில் கேபேஜ் சேர்த்து கொண்டேன்

Menaga Sathia said...

ஓ உருளைக்கு பதில் கேபேஜ் சேர்த்திங்களா,அடுத்த தடவை நானும் அப்படி செய்து பார்க்கிறேன்.செய்துப் பார்த்து பின்னூட்டம் குடுத்ததற்க்கு மிக்க நன்றி ஜலிலாக்கா!!

01 09 10