Friday, 12 June 2009 | By: Menaga Sathia

நெத்திலி கருவாடு வறுவல்

தே.பொருட்கள்:

நெத்திலி கருவாடு -100 கிராம்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி -2
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
இஞ்சிபூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*கருவாட்டை சுத்தம் செய்துக் கொள்ளவும்.வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெயில் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்,நன்கு வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது+தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கி வரும் போது மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

*1/2 கப் தன்ணீர்+கருவாடு போட்டு நன்கு வேகவிட்டு நீர் சுண்டும் வரை நன்கு சுருள கிளறி இறக்கவும்.

*ஈஸி நெத்திலி கருவாடு வறுவல் ரெடி.

14 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

எனக்கு நெத்திலி மீன் , கருவாடு என்றால் மிகவும் விருப்பம். இங்கு கிடைக்காது. இப்படி செய்து மேலும் ஆசையை காட்டுறிங்கள்…ஒரு கிலோ நெத்திலி கருவாடு பர்சல் ப்லிஸ்.

Suresh said...

மிக அழகான சமையல் குறிப்புகள், நேற்று மனைவி ஊர்ல இலலாத போது சமைக்க உபயோகமா இருந்தது, மனைவியிடமும் உங்க தளத்தை பற்றி சொன்னேன் மிக அருமை, படத்துடன் விளக்கமும் எளிதாய் உள்ளது..

தொடர்ந்து சமையுங்கள் சாரி தொடர்ந்து ;) எழுதுங்கள்..

என் மனைவியைஅவரது தோழிக்களுக்கும் உங்களது தளத்தை பற்றி சொல்ல சொல்லி இருக்கிறேன்

தமிழர்ஸ்க்கு நன்றி இப்படி ஒரு நல்ல சமையல் தளத்தை தெரிவித்தற்க்கு

:-)

Canada Kesa said...

அதுசரி...எப்போ கருவாட்டை சட்டிக்க போட்டது?...செய்முறையில காணலே....!!!

Menaga Sathia said...

எனக்கு இங்கு கிடைக்கும்பா ஆனால் நல்லாயிருக்காது.எனக்கு ஊரிலிருந்து அனுப்புனாங்க.உங்களுக்கு இல்லாததா,பார்சல் உடனே அனுப்பி வைக்கிறேன்,நன்றி கீதா!!

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்!!
//என் மனைவியைஅவரது தோழிக்களுக்கும் உங்களது தளத்தை பற்றி சொல்ல சொல்லி இருக்கிறேன்

தமிழர்ஸ்க்கு நன்றி இப்படி ஒரு நல்ல சமையல் தளத்தை தெரிவித்தற்க்கு//உங்கள் பின்னூட்டம் எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது.உங்கள் மனைவிக்கும்,தமிழர்ஸ்க்கும் மிக்க நன்றி!!

Menaga Sathia said...

//அதுசரி...எப்போ கருவாட்டை சட்டிக்க போட்டது?...// நீங்கள் என்ன சொல்லிருக்கிங்கன்னு புரியல.மீண்டும் செய்முறையை படித்து பார்த்ததில் தப்பு எதுவும் தெரியல.புரியும் படி சொன்னால் தப்பை திருத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி கனடா!!

TechShankar said...

thank you so much for posting it here..

எல் கே said...

:)))

Menaga Sathia said...

நன்றி தமிழ்நெஞ்சம்!!

நன்றி எல்கே!!

Anonymous said...

எங்க வீட்ல பொரிச்சு எடுத்துட்டு, அதன் பிறகு வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை எல்லாம் தாளித்து பொரிச்ச கருவாட்டில் போடுவார்கள். இது எண்ணெய் குறைவாக இருக்கறதால நல்லது.

ஆஸியில் கருவாடு பொரிக்கறதுன்னா பெரிய துன்பம். அதனாலேயே சமைக்க விடுறதில்லை. இந்த முறை நன்றாக இருப்பதால் செய்தேன். மணம் அவ்வளவாக வரவில்லை. இறக்கும் போது ஒரு முட்டையை நன்கு அடித்து (உப்பு, மிளகு தூள், க்யூமின் ஸீட்ஸ் பவுடர்) விட்டு கிண்டி இறக்கினேன். இன்னும் ருசியாக இருந்தது.

Menaga Sathia said...

//அனாமிகா துவாரகன் has left a new comment on your post "நெத்திலி கருவாடு வறுவல்":

எங்க வீட்ல பொரிச்சு எடுத்துட்டு, அதன் பிறகு வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை எல்லாம் தாளித்து பொரிச்ச கருவாட்டில் போடுவார்கள். இது எண்ணெய் குறைவாக இருக்கறதால நல்லது.

ஆஸியில் கருவாடு பொரிக்கறதுன்னா பெரிய துன்பம். அதனாலேயே சமைக்க விடுறதில்லை. இந்த முறை நன்றாக இருப்பதால் செய்தேன். மணம் அவ்வளவாக வரவில்லை. இறக்கும் போது ஒரு முட்டையை நன்கு அடித்து (உப்பு, மிளகு தூள், க்யூமின் ஸீட்ஸ் பவுடர்) விட்டு கிண்டி இறக்கினேன். இன்னும் ருசியாக இருந்தது. // நன்றி அனாமிகா!! இதுவரை கருவாட்டை பொரித்தும்,முட்டை சேர்த்தும் செய்ததில்லை..

Unknown said...

i try this dry fish as per your instuction.Its so nice,
Please update as like more

Unknown said...

i try this dry fish as per your instuction.Its so nice,
Please update as like more.
Please update morning food detils..

Menaga Sathia said...

@சாமுவேல் ராஜா

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!!

01 09 10