தே.பொருட்கள்:
வேக வைத்த முட்டை - 5
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
வரமிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
பிரியாணி மசாலாபொடி - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
*வெங்காயம்+தக்காளியை நீளவாக்கில் அரியவும்.
*முட்டையை 2 ஆக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு + வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளியைப் போட்டு நன்கு மசிய வதக்கவும்.
*வதங்கியதும் மிள்காய்த்தூள்+பிரியாணி மசாலா போட்டு நன்கு வதக்கி 1/4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
*தண்ணீர் சுண்டி வரும் போது முட்டையைப் போட்டு மஞ்சள் கரு உடையாமல் கிளறி இறக்கவும்.
16 பேர் ருசி பார்த்தவர்கள்:
எனக்கு மிகவும் பிடித்த முட்டை தொக்கு...சோம்பு சேர்ப்பதால் கூடுதல் சுவையாக இருக்கும். சூப்பர்...
எனக்கு பிடிச்ச முட்டை தொக்கு. சூப்பர்...எனக்கு இதனை நல்லெண்ணெயில் செய்ய மிக பிடிக்கும். ...நன்றாக இருக்கின்றது
எனக்கு பிடிச்சுருக்குங்க..
என் கருத்தையும் மறக்காம சொல்லிட்டேன்.
இந்த பதிவை அம்மாவிடம் காட்டி செய்ய சொல்லியிருக்கேன்.
அவர்களின் கைவண்ணம் எப்படின்னு பார்க்கணும்..
சுவையான பதிவு.. நன்றி
வாழ்த்துக்கள்!!
உங்கள் குறிப்புகள் பலவும் படித்துள்ளேன் . எளிமையாக, அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்
முட்டை தொக்கு என் ஃபேவரைட்!!!
சிறுகதைப் போட்டியில் கலந்து கொள்க! நேரமிருந்தால் என் சிறுகதை படிக்கவும்!!!!http://abidheva.blogspot.com/2009/06/blog-post.html
உங்களுக்கும் பிடிக்குமாப்பா,எனக்கும்தான்.ஆமாம் கீதா சோம்பு வாசனை ரொம்ப நல்லாயிருக்கும்.நல்லெண்ணெயில் செய்ததில்லை.செய்துப் பார்க்கிறேன்.மிக்க நன்றி கீதா தங்கள் கருத்துக்கு!!
ரொம்ப நன்றி ரங்கன் உங்கள் வருகைக்கும் கருத்தை மறக்காம சொன்னதற்க்கும்!!.அம்மாவை செய்ய சொல்லிருக்கிங்களா சந்தோஷம்.அம்மாவின் கைவண்ணமே தனிதான்.
என் குறிப்பை நீங்கள் படித்துள்ளதை சொல்லும்போது சந்தோஷமாக இருக்கிறது.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சுந்தர்!!
உங்களுக்கும் இந்த ரெசிபி பேவரைட்டா,எனக்கும் ரொம்ப பிடிக்கும்.உங்களின் சிறுகதை படித்தேன்.மிக அருமை.நேரிலே நடப்பது போன்று ஒரு உணர்வு.சிறுகதை போட்டியின் அழைப்பிற்க்கு மிக்க நன்றி,ஆனால் இதுவரை கதை எழுதியதில்லை படிப்பதுண்டு.எழுதும் ஆர்வம் இருக்கு,முயற்சி செய்கிறேன்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி தமிழினி!!
நன்றி... என்னை போன்ற தனியாக வெளியூரில் இருப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
ஒரு சின்ன டவுட் சோம்பு = ஜீரகம் ???
வரமிளகாய்த்தூள் ......என்றால் வத்தல் milakaayaa?
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி கணேஷ்!!
சோம்பு = பெருஞ்சீரகம்,அசைவ உணவுகளுக்கு செரிமானத்துக்காக சேர்ப்பது.
சீரகம் அதை ரசம் செய்ய உபயோகப்படுத்துவது
//வரமிளகாய்த்தூள் ......என்றால் வத்தல் milakaayaa?// ஆமாம் மலர் வத்தல் மிளகாய்த்தூள் தான் அது.நன்றி!!
மேனகா சூப்பரான முட்டை தொக்கு, பிரியாணி மசாலா சேர்ப்பதால் சுவை அசத்தலாக இருக்கும்.
நானும் பிரியாணி மசாலா திரித்து வைத்துள்ளேன், இறால் மற்றும் மீன் வறுவலுக்கு கொஞ்சம் சேர்த்து செய்து பாருஙக்ள் சுவை இன்னும் தூக்கலாக இருக்கும்.
நீங்க சொன்ன மாதிரி பிரியாணி மசாலா பொடியை இறால்,மீன் வறுவலுக்கு செய்து பார்க்கிறேன் ஜலிலாக்கா,நன்றி!!
Post a Comment