தே.பொருட்கள்:
தக்காளி - 3
புளி - 1கோலிகுண்டளவு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
ரசப்பொடிக்கு:
துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்
தனியா - 3 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பில்லை - சிறிது
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1சிறுதுண்டு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
செய்முறை :
*தக்காளியை கொதிநீரில் போட்டு தோலெடுத்து அரைக்கவும்.அதனுடன் புளியை 1/2 கப் நீரில் கரைத்து தக்காளியுடன் சேர்க்கவும்.
*ரசப்பொடிக்கு கொடுத்துள்ளவைகளில் பொடிக்கவும்.
*தக்காளி கரைசலில் உப்பு+மஞ்சள்தூள் +தேவையான நீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
*நன்கு கொதித்ததும் ரசப்பொடியை தூவி 5 நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை இறக்கவும்.
*கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளில் தாளித்து கொட்டவும்.
26 பேர் ருசி பார்த்தவர்கள்:
அருமை!!
தக்காளி ரசம் அருமை
டங்ஸ்கிட்ட சொல்லிடறேன்
இது நமக்கு அம்பூட்டி பிடிக்காது.
அந்த பாத்திரம் அழகா இருக்குங்க.
ருசியான தக்காளி ரசம்.. எனக்கு ரொம்ப பிடித்த ரசத்தில் இதுவும் ஒன்று..
மேனகா சேம் பின்ச் நானும் இரண்டு வகையான ரசம் செய்து வைத்துள்ளேன்.
பார்க்கவே நல்ல இருக்கு ஊற்றி குடிக்கனும் போல
super presentation Menaga
படிக்க படிக்க ருசியா இருந்துச்சுங்க ,நல்ல பதிவு வாழ்த்துக்கள் தொடருங்கள் ..
தேவரஜ் விட்டலன்
http://vittalankavithaigal.blogspot.com/
ரசமும் அருமை..வைத்துள்ள பாத்திரமும் அருமையாக இருக்கின்றது..வாழ்க வளமுடன் வேலன்.
நன்றி ஸாதிகாக்கா!!
நன்றி சாரு அக்கா!!
நன்றி ஜமால் சகோ!!
நன்றி சிநேகிதி!!
நன்றி ஜலிலாக்கா!!
நன்றி காஞ்சனா!!
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி விட்டாலன்!!
ஹைய்யா ரசம் ரசம்...
ஸ்டாரோட ரசம் ஜூப்பருக்கா...!
Nice bowl. Looks yummy
hai menaga today i did this rasam very tasty
சூப்பர் ரசம் மேனகா பார்த்தாலே குடிக்கலாம் போல இருக்கு
SUper thakkali rasam...arumai Menaga..
துவரம்பருப்பு வேகவைக்காம, பொடிச்சு போடுறதும், ரசப்பொடியைத் தாளிப்பில் போடாமல் தூவி விடுவதும் புதுசா இருக்கு. பிரசண்டேஷன் சூப்பர்.
நன்றி வசந்த்!!
நன்றி பத்மா!!
செய்து பார்த்து நன்றாக வந்ததில் மிக்க சந்தோஷம்.நன்றி சாரு அக்கா!!
நன்றி தேனக்கா!!
நன்றி ப்ரியா!!
ரசப்பொடியை தாளிப்பில் நாங்க போடமாட்டோம்.நன்றி ஹூசைனம்மா!!
ரசப் பொடிக்காக நீங்க சொல்லி இருக்கிறதுக்கு பதில் கடையில் கிடைக்கும் ரசப் பொடி போட்டு செஞ்சாலும் நல்லா வருமா? நான் மிளகு ரசம் பேஸ்ட் கொதிக்க வச்சிக் குடிச்சிட்டு இருக்கேன் :))
சுவையான ரசம், சும்மாவே ஒரு கப்பில் ஊற்றி குடிச்சிடலாம்.
கடையில் விற்கும் ரசப்பொடி போட்டும் செய்யலாம்.அது ஒரு சுவையாக இருக்கும்.வீட்டில் நாமே பொடித்து போடுவது ஒரு சுவையாக இருக்கும்.நீங்கள் 2முறையும் செய்து பாருங்கள்.என் சாய்ஸ் வீட்டு ரசப்பொடிக்குதான்.மிளகு ரசம் குடிக்கிறீங்களா?ஏன் என்னாச்சு?நன்றி சகோ!!
நன்றி ஷஃபி ப்ரதர்!!
tomato rasam super
Post a Comment