தே.பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
சோம்புத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
*குக்கரில் சிக்கன்+ 1 கப் நீர்+தனியாத்தூள்+மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள் சேர்த்து 3 விசில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
*ப்ரஷர் அடங்கியதும் நீர் வற்றும் வரை பிரட்டி ஆறவைத்து எலும்பில்லாமல் சதைப்பகுதியை மட்டும் எடுத்து தனியாக வைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய்+சோம்புத்தூள் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
*வதங்கியதும் சிக்கன்+உப்பு+பட்டாணி சேர்த்து நன்கு பொலபொலவென்று வரும் வரை சுருள வதக்கி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
பி.கு:
எலும்பில்லாத சிக்கனில் செய்வது ரொம்ப ஈஸியா இருக்கும்.காரம் வேண்டுமானால் பச்சை மிளகாய் இன்னும் அதிகமாக சேர்க்கவும்.
25 பேர் ருசி பார்த்தவர்கள்:
முட்டை பொடிமாஸ் தான் நான் சாப்பிட்டு இருக்கேன்...
இது நல்லாயிருக்குமே! எனக்கும் ரொம்ப புடிக்கும் மேனகா
பேச்சிலார் வாழ்க்கையின் போது
இதை அதிகம் செய்வதுண்டு
பெரும்பாலும் மீனில் செய்வேன் மதியம் ஃபிரை செய்து மிஞ்சியதில் செய்வேன் - ரொம்ப பிடிக்கும்.
சிக்கனிலும் சாப்பிட்டு பாருங்க.ரொம்ப நல்லாயிருக்கும்.நன்றி ஜெட்லி!!
உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?என் பொண்ணுக்கு தான் ரொம்ப பிடித்திருந்தது.நன்றி மலிக்கா!!
//பெரும்பாலும் மீனில் செய்வேன் மதியம் ஃபிரை செய்து மிஞ்சியதில் செய்வேன் - ரொம்ப பிடிக்கும்//நல்ல ஐடியாவா இருக்கு.இதுவரை இப்படி ப்ரை செய்த மீனில் செய்ததில்லை.மீதமிருந்தால் இப்படி செய்து பார்க்கனும்.நன்றி சகோ!!
மேனகா ரொம்ப ஈசியாக இருக்கு, சாண்ட்விச்க்கு இது போல் செய்வதுண்டு.
ரொம்ப நல்ல இருக்கும்.
very new...good for sandwich stuffing
வணக்கம் சகோதரி
செய்வதற்கு எளியமையாக இருக்கும் போல அப்ப இந்த ஞாயிறு செய்து பார்த்துடுவோம்.
இதில் மிளகுதூள் சேர்க்கலாமா?
பி.கு எளிய முறையில் தந்தூரி சிக்கனை ஓவன் இல்லாமல் செய்யும்
முறை இருந்தால் சொல்லவும்.
நன்றி !
நீங்கள் சொல்வது போல் சாண்ட்விச்க்கும் செய்து பார்க்கனும்.நன்றி ஜலிலாக்கா!!
நன்றி Trendsetters!!
தாராளமாக பச்சை மிளகாய்க்கு பதில் மிளகுத்தூளும் சேர்க்கலாம்.ஞாயிறன்று செய்து பார்த்து சொல்லுங்கள் சகோ.
//பி.கு எளிய முறையில் தந்தூரி சிக்கனை ஓவன் இல்லாமல் செய்யும்
முறை இருந்தால் சொல்லவும்// அவன் இல்லாமல் சிக்கனில் தந்தூரி மசாலா தடவி நன்கு ஊறவைத்து எண்ணெயில் பொரிக்கலாம்.தந்தூரி மசாலாக்கு பதில் புட்கலர்+மிளகாய்த்தூள்+தயிர்+இஞ்சிபூண்டு விழுது+உப்பு சிக்கனின் அளவிற்கேற்ப சேர்த்து நன்கு ஊறவைத்து செய்யவும்.
நன்றி சகோ!!
nice one
சூப்பரா இருக்கு சஷிகா நான் செய்ததே இல்லை
படிக்கும் போதே சாப்பிடத் தோனுதே...இந்த சன்டே ஸ்பெசல்.போன வாரம் நீங்க சொன்ன முட்டைக்குழம்பு வச்சென். அறை நண்பன் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டான்.
Looking Good and Nice
ப்ராஸ்டட் சிக்கன்(முழுதாக)வாங்கினால் சில சமயம் மிகுதியாக இருக்கும்.அப்ப இப்படி பொடிமாஸ் செய்வதுண்டு. ஜலீலா சொன்னது போல் சாண்ட்விச்க்கு உபயோகிக்கலாம்.
சிக்கன் பொடிமாஸ் நன்றாக இருக்கிறது.பிள்ளைகளுக்குப் பிடிக்கும்.
ஆமா எனக்கு ஒரு சந்தேகமுங்க. உலகில் இவ்வளவு சமையல் items இருக்குதா ஆனால் என் வீட்டில் சுமார் பத்து item மேல் எதுவுமே செய்ய மாட்டேங்கிறாங்க. இனிமேல் நானே செய்ய வேண்டியது தான்
பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்கு ஸேண்ட்விச்சுக்கும், சமோசா ஃபில்லிங்குக்கும் இது மாதிரிதான் செய்றது. இதுல மீதி இருந்தா அப்படியே கொஞ்சம் கடலைமாவு சேத்து சிக்கன் பகோடா ஆக்கிடலாம்.
பச்சை மிளகாய்க்குப் பதில் பெப்பர் பவுடர்தான் உபயோகிப்பேன்.
பிரியாணி அல்லது குழம்பில் மீந்துபோன சிக்கனையும் உதிர்த்து செய்வதுண்டு.
பார்க்க அழகா இருக்கு பிரஸண்டேஷன்.
நன்றி ஷாமா!!
தேனக்கா செய்து பாருங்கள்.அப்புறம் அடிக்கடி இதைத்தான் செய்வீங்க.நன்றி தேனக்கா!!
முட்டைக் குழம்பு செய்து பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.அப்போ நீங்க சாப்பிடலையா?சண்டே இந்த பொடிமாஸ் செய்து பார்த்து சொல்லுங்க.நன்றி புலவரே!!
நன்றி சுதாண்ணா!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி மாதேவி!!
//ஆமா எனக்கு ஒரு சந்தேகமுங்க. உலகில் இவ்வளவு சமையல் items இருக்குதா ஆனால் என் வீட்டில் சுமார் பத்து item மேல் எதுவுமே செய்ய மாட்டேங்கிறாங்க. இனிமேல் நானே செய்ய வேண்டியது தான்//ஹா ஹா அப்போ நீங்களும் கரண்டியை தூக்க போறீங்கன்னு சொல்லுங்க.ஒவ்வொன்னா உங்க கையால செய்து அசத்துங்க எல்லோரையும்.நன்றி சசி!!
//பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்கு ஸேண்ட்விச்சுக்கும், சமோசா ஃபில்லிங்குக்கும் இது மாதிரிதான் செய்றது. இதுல மீதி இருந்தா அப்படியே கொஞ்சம் கடலைமாவு சேத்து சிக்கன் பகோடா ஆக்கிடலாம்.// ஆஹா உங்க கூடுதல் டிப்ஸ்க்கு மிக்க நன்றி.எனக்கு இந்த ஐடியா தோணவே இல்லையே....
//பிரியாணி அல்லது குழம்பில் மீந்துபோன சிக்கனையும் உதிர்த்து செய்வதுண்டு.//இந்த ஐடியாவும் நல்லாயிருக்கு.கருத்துக்கும் கூடுதல் ஐடியாவுக்கும் நன்றி ஹூசைனம்மா!!
அருமை, தாங்கள் விரும்பினால் நமது தமிழ்த்தோட்டத்தில் உங்கள் படைப்பை வெளியிட அவலாக உள்ளோம், மேலும் தகவலுக்கு http://tamilparks.50webs.com
Super podimass, super side dish for rotis..
Post a Comment