Friday, 10 September 2010 | By: Menaga Sathia

இட்லி பொடி /Idli Podi

தே.பொருட்கள்:
பொட்டுக்கடலை - 1/2 கப்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 5
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிறிய கட்டி
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*மேற்கூறிய அனைத்து பொருட்களில் உப்பு+பெருங்காயத்தை தவிர அனைத்தையும் லேசாக வாசனை வரும் வரை வெறும் கடாயில் வறுக்கவும்.
*பெருங்காயத்தை மட்டும் என்ணெயில் பொரித்து அதனுடன் வறுத்த பொருட்கள்+உப்பு சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.

*கடைசியாக எடுக்கும் போது சிறுதுண்டு வெல்லம் சேர்த்து அரைத்தால் நன்றாகயிருக்கும்.ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு பயன்படுத்தவும்.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

Padhu Sankar said...

Your version is a little different from mine Dear .I add ellu podi also .Will try yours next time for a change

Chef.Palani Murugan, said...

Nice!

ஸாதிகா said...

மிளகுகாரத்துடன் வித்தியாசமாகத்தான் இருக்கும்.

Nithu Bala said...

rombha nalla irukku menaga.vithyasama irukku recipe.thanks dear

Menaga Sathia said...

நன்றி பது!! அடுத்தமுறை செய்யும் போது எள் சேர்த்து செய்து பார்க்கிறேன்...

நன்றி செஃப்!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி நிது!!

தெய்வசுகந்தி said...

இது நல்லா இருக்கு மேனகா! நாங்க எல்லா பருப்பும் சேர்த்து செய்வோம்.

கார்த்திகா ஆசிரியை said...

இதில் ஒரு தேக்கர‌ண்டி மல்லி (தனியா)சேர்த்தால் சுவை கூடும்.

ஹேமா said...

நன்றி நன்றி.எனக்குப் பிடித்த ஒன்று !

Krishnaveni said...

very nice, my fav too, great

Unknown said...

கலரே விதியாசமாக இருக்கு செய்து பார்ப்போம்,
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் மேனகா

'பரிவை' சே.குமார் said...

Nice!

சிங்கக்குட்டி said...

சூப்பர், எனக்கு மிக பிடித்த ஒன்று கொஞ்சம் காரம் அதிகமாக இருந்தால் ம்ம்ம்...

இதுவும் பருப்பு பொடியும் எனக்கு பலநாள் பல நாடுகளில் கை கொடுத்து இருக்கிறது.

எப்படி இருக்கீங்க மேனகா? எப்போதும் எனக்கு உங்கள் பின்னூட்டம்தான் முதலில் வரும் ஆனா இப்போ ஆளே காணோம்!, அதிக வேலை பளுவா?

நன்றி.

Ahamed irshad said...

Idly Podi i Like it..

vanathy said...

idli podi super, Menaga

Mahi said...

வித்யாசமா இருக்கு மேனகா!
/மைய அரைத்தெடுக்கவும்./இட்லிப்பொடி கரகரப்பா அரைச்சு தான் பழக்கம். இப்படி ட்ரை பண்ணிபாக்கிறேன்.

R.Gopi said...

பொட்டுக்கடலை சேர்த்து இட்லி பொடி..

மிக வித்தியாசமான ரெசிப்பி மேனகா..

என்னோட ஃபேவரிட்....

ஹுஸைனம்மா said...

ரொம்ப சிம்பிளா, செய்ய வசதியா இருக்கு!!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி தெய்வசுகந்தி!! எல்லா பருப்பும் சேர்த்து செய்யும்போது பொட்டுக்கடலை சேர்க்கமாட்டோம்...

நன்றி கிருஷ்ணவேணி!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சிநேகிதி!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி சிங்ககுட்டி!! நான் நன்றாக இருக்கேன்.நீங்க எப்படி இருக்கிங்க?? ஆமாம் கொஞ்ச வேலை பளுதான்,பொண்ணு வளர்ந்துவிட்டதால் அவங்களும் கீபோர்ட் தட்டனுமாம்,அதான் கம்ப்யூட்டர் பக்கம் அதிகம் வரமுடியல...

Menaga Sathia said...

நன்றி அஹமது!!

நன்றி வானதி!!

நன்றி மகி!! இந்த பொட்டுக்கடலை பொடி மட்டும் அப்படிதான் அரைப்போம்,அரைத்து பாருங்கள்...

நன்றி கோபி!!

நன்றி ஹூசைனம்மா!!

Menaga Sathia said...

நன்றி கார்த்திகா!! நீங்கள் சொல்லியபடி தனியா சேர்த்து அரைத்து பார்க்கிறேன்....

நன்றி ஹேமா!!

01 09 10