Sunday, 26 September 2010 | By: Menaga Sathia

கினோவா(Quinoa) கோதுமைரவை இட்லி

தே.பொருட்கள்:
கினோவா - 1 கப்
கோதுமைரவை - 1 கப்
வெ.உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பிரவுன் அரிசி- 1/4 கப்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை:
*மேற்கூறிய பொருட்களில் கோதுமைரவை +உப்பை தவிர அனைத்தையும் 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பொருட்கள் ஊறியதும் மைய அரைக்கவும்.

*அதனுடன் கோதுமைரவை+உப்பு சேர்த்து கரைத்து 8 மணிநேரம் ஊறவைக்கவும்.

*மாவு நன்கு புளித்ததும் இட்லியாக ஊற்றி சுட்டெடுக்கவும்.
 
பி.கு:
மாவு நன்கு புளித்தால்தான் இட்லி நன்றாகயிருக்கும்.தோசையும் நன்கு மெலிதாக வரும்.இந்த இட்லிக்கு இட்லி பொடி+கார சட்னி பெஸ்ட் காம்பினேஷன்.

32 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

கினோவா(Quinoa) கோதுமைரவை இட்லி ..பெயரே புதுசா இருக்கு கினோவா னா என்ன் மேனகா>

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்லாயிருக்கு. செய்து பார்க்கணும்.

Asiya Omar said...

கோதுமைரவை இட்லி பக்குவாமாக இருக்கு.

Nithu Bala said...

very healthy recipe Dear..thanks for sharing.

vanathy said...

very healthy & delicious recipe!

கவிதா | Kavitha said...

Is Quinoa available in India?

Unknown said...

Hi,

arumaiyaana idli..I have never tried this!!

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

Krishnaveni said...

looks so good, yummy

சசிகுமார் said...

அருமை அக்கா நன்றி

Jaleela Kamal said...

idli arumai

Menaga Sathia said...

நன்றி சிநேகிதி!! கினோவா என்பது பார்லி,ஒட்ஸ் மாதிரி ஒரு வகை தானியம்பா.இதுவும் ரொம்ப நல்லது.விக்கிபீடியாவில் பாருங்களேன் அல்லது கூகிள் இமேஜில் பாருங்கள்..

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி நிதுபாலா!!

Menaga Sathia said...

நன்றி வானதி!!

கவிதா இந்தியாவில் கிடைக்குதான்னு தெரியவில்லை..தானியங்கள் பிரிவில் இருக்குமென நினைக்கிறேன்..

நன்றி ஷமினா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

Menaga Sathia said...

நன்றி சசி!!

நன்றி ஜலிலாக்கா!!

Gita Jaishankar said...

Way to go dear, thanks for sharing this healthy dish...i am definitely going to try this...idlis have turned out so soft :)

Kanchana Radhakrishnan said...

idli arumai.

Lav said...

semma super healthy dish ...Looks yumm !!


Lavanya

www.lavsblog.com

Malini's Signature said...

மேனகா எப்படிப்பா இப்படி புதுசு புதுசா ரெசிபி கண்டுபிடிக்குறீங்க? ...ம்ம் நல்ல ஆரோகியமான குறிப்பு.

Sarah Naveen said...

So soft and spongy!! yummy yumm!!

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

Akila said...

lovely and tasty idli's...

Mahi said...

இட்லி சூப்பரா இருக்கு..எனக்குதான் இந்த கினோவாவை எங்கே கண்டுபுடிக்கறதுன்னு புடிபட மாட்டேன்னுது.தெரிந்த சூப்பர்மார்க்கெட்ல எல்லாம் தேடிப்பாக்கறேன்,இன்னும் சிக்கமாட்டேன்னுது!

பாயிஸா,கினோவா-ன்னா நம்ம ஊர் "கம்பு"தானாம்.சமீபத்திலதான் இது எனக்கு தெரிந்தது.ஆனா இன்னும் கண்ணால கூட பாக்கலை.:)

Menaga Sathia said...

நன்றி கீதா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி காஞ்சனா!!

நன்றி லாவண்யா!!

நன்றி ஹர்ஷினி அம்மா!!

Menaga Sathia said...

நன்றி சாரா!!

நன்றி ராமலஷ்மி அக்கா!!

நன்றி அகிலா!!

நன்றி மகி!! கினோவா நம்ம ஊர் கம்பு வா?? 2ம் வேறு என்று நினைக்கிறேன்...

Priya Suresh said...

Wat a healthy idly, superaa irruku Menaga..

Mahi said...

சமீபத்திலதான் இப்படி அறுசுவைல சொல்லிருந்தாங்க மேனகா!எனக்கும் சரியாத் தெரிலங்க.நான் கம்பையும் பாத்த நினைவில்ல,இங்கே கினோவாவும் என் கண்ணுல மாட்டல.

Alarmel Mangai said...

Quinoa எல்லா கடைகளிலும், Health Food section ல இருக்கும்.
Whole foods Stores ல கட்டாயம் கிடைக்கிறது.
அருமையான recipe. உடன் செய்து சாப்பிட ஆவலாக உள்ளது..

தெய்வசுகந்தி said...

சூப்பர் ஹெல்த்தி இட்லி மேனகா!
கினோவா 'கம்பு' இல்லை மகி! whole foodsல தேடிப்பாரு கிடைக்கும்.
http://www.quinoa.net/
இதுல படம் போட்டிருக்காங்க!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

மகி உங்க சந்தேகத்துக்கு அம்முவும்,தெய்வசுகந்தி பதில் கொடுத்திருக்காங்க...

நன்றி அம்மு,செய்து பாருங்கள்..

நன்றி தெய்வசுகந்தி!!

Mahi said...

என் சந்தேகத்தைத் தீர்த்து வைத்ததுக்கு நன்றிங்க அம்மு,சுகந்திக்கா & மேனகா.

whole foods எங்க வீட்டுப்பக்கத்துல இல்ல.அதான் தெரில எனக்கு.அடுத்தமுறை பார்க்கிறேன். நன்றி!

Sorna said...

Hello instead of brown rice can i use idly rice...quinoq means thinai

Menaga Sathia said...

@ Sorna lakshmi

ப்ரவுன் அரிசிக்கு பதில் இட்லி அரிசியும் உபயோகிக்கலாம்.கினோவா மற்றும் தினை இரண்டும் வேறு.தினையை ஆங்கிலத்தில் Foxtail millet சொல்லுவாங்க.

கினோவா வெள்ளை கலரிலும்,தினை வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.

Sorna said...

Hi thanku for ur reply....quinoa means seemai thinai...

01 09 10