Friday, 28 December 2012 | By: Menaga Sathia

கேண்டிட் ஆரஞ்சு தோல்/Homemade Candied Orange Peel

Recipe Source: Gayathris Cook Spot

தே.பொருட்கள்

ஆரஞ்சுப்பழம் -2
சர்க்கரை - 3/4 கப் + 1/4 கப்
நீர் -1 1/4 கப்

செய்முறை

*ஆரஞ்சுப்பழத்தின் மேலும் கீழ்ப்பக்கமும் வெட்டினால் தோலை உரிக்க ஈசியாக இருக்கும்.

*கத்தியால நேராக 5 கோடுகள் போட்டு தோலினை உரித்தெடுக்கவும்.
*2 பழத்திலிருந்து 10 இதழ்கள் வரும்.
*தோலின் கசப்புதன்மை நீங்க கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கல் போட்டு நீரை வடிக்கட்டவும்.

*இதே மாதிரி 2 அல்லது 3 முறை செய்யவும்.
*பின் தோலின் வெள்ளைப் பகுதியை கத்தியால் கீறி எடுக்கவும்.
*ஒவ்வொரு இதழ்களையும் 2 ஆக நறுக்கவும்.
*3/4 கப் சர்க்கரை+ 1 1/4 கப் நீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆரஞ்சுத்தோலினை போட்டு 45 நிமிடங்கள் கொதிக்க வைத்தால்  தோல் நன்கு வெந்து கீழேயுள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.
*ஒவ்வொறு தோலையும் தனித்தனியாக காயவைக்கவும்.
*3/4 பாகம் உலர்ந்ததும் மீதமுள்ள சர்க்கரையில் பிரட்டி மீண்டும் உலரவிடவும்.
*ஒர் இரவு முழுக்க உலரவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
பி.கு

*இதனை கேக்,குக்கீஸ் செய்ய பயன்படுத்தலாம்.

*இதனை பொடியாக நறுக்கியதில் 1/2 கப் அளவு கிடைத்தது.

15 பேர் ருசி பார்த்தவர்கள்:

Lifewithspices said...

superb.. its raining oranges everywhere i guess..

Priya Suresh said...

Super candied orange peels, well done.

M. Shanmugam said...

நல்ல ஒரு சமையல் குறிப்பை தந்தமைக்கு நன்றி.

Tamil News Service"

ராமலக்ஷ்மி said...

பொறுமையாகச் செய்திருக்கிறீர்கள். மிக அருமை.

Shanavi said...

Oh Sashi..did u read my mind or wat..I's thinking this recipe and it's coincident that am seeing the same recipe here..Great going..Sooper ponga

Unknown said...

Interesting recipe. I've never heard.Tempting.

divyagcp said...

Nice and useful post..

Hema said...

Wow, I think I'll finish them off just like that..

enrenrum16 said...

ஆரஞ்சு தோல்ல ஒரு ஸ்வீட்டா... எப்படிப்பா தோணுது....:)

www.mahaslovelyhome.com said...

don`t know d dis lang.by d pics i understood n doen perfectly.sure tastes delicious :)

தமிழ் காமெடி உலகம் said...

இது வரை அறிந்திடாத தகவல்.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

Asiya Omar said...

அப்படியே எடுத்து சாப்பிடத்தூண்டுகிறது.நல்ல பகிர்வு.

Unknown said...

Looks delicious...nice post...luv to try it...

இமா க்றிஸ் said...

நல்ல பகிர்வு மேனகா.
நானும் நல்ல பழங்கள் கிடைக்கும் போதெல்லாம் செய்து வைப்பதுண்டு. உங்கள் முறை வித்தியாசமாக இருக்கிறது. குறித்து வைத்துக்கொள்கிறேன். நன்றி.

Kanchana Radhakrishnan said...

அருமை.

01 09 10