Monday 5 August 2013 | By: Menaga Sathia

தயிர் சாதம்/Curd Rice

தே.பொருட்கள்

பச்சரிசி - 1 கப்
பால் - 1/2  கப்
தயிர் -1/2 கப்
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு -தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி -1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*அரிசியை 2 1/2 கப் நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவைக்கவும்.

*பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்து,வேகவைத்த சாதத்தில் சூட்டோடு பாலை ஊற்றி உப்பு சேர்த்து மசிக்கவும்.

*சாதம் ஆறியதும் தயிர்+கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து தாளித்து சேர்க்கவும்.

பி.கு 

பொதுவாக தயிர் சாதத்தில் பொடியாக நறுக்கிய‌ கேரட்+மாங்காய் தான் சேர்ப்பேன்,மாதுளை முத்துகள் சேர்த்தால் சுவை மாறிவிடும் என்பதால் அவைகளை நான் சேர்ப்பதில்லை..

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

ராஜி said...

இப்போ திராட்சையும், மாதுல்ளையும் கூட சேர்க்குறாங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தயிர் சாதம் அருமை.

மாதுளை, திராட்சை பொன்ற ப்ழங்களை சிலர் [குறிப்பாக திருமண விருந்துகளில்] சேர்த்து விடுகிறார்கள்.

நீங்கள் சொல்வது போல ருசி மாறிவிடும் தான். தித்தித்து வழியும்.

பகிர்வுக்கு நன்றிகள்.

great-secret-of-life said...

Comforting rice Menega

Shanthi said...

i cannot live without curd rice...perfectly made....

Komala Devi said...

Yummy receipe

'பரிவை' சே.குமார் said...

தயிர் சாதத்தில் மாங்காய் , கேரட் போட்டு செய்திருக்கிறோம்... மாதுளை முத்துக்களா?

இராஜராஜேஸ்வரி said...

அருமையான தயிர் சாதம் ..@!

பொன் மாலை பொழுது said...

பிரமாதம், எளிமை .
மாதுளை முத்துகளை சேர்த்தல் சற்று நேரத்தில் சாதமும் கசக்க ஆரம்பித்துவிடும்
பதிலாக அவித்த வேர்கடலையே நல்லது.

Priya Anandakumar said...

very very comforting and nice menaga... just love it...

Unknown said...

தயிர்சாதம் பார்ப்பதற்கே சுவையாக இருக்கிறதே! புகைப்படத்திலேயே அது எப்படி இருக்கும் என புரிகிறது.மிகச் சுலபமாக செய்யும் முறையை விளக்கி இருக்கிறீர்களே நன்றி

Akila said...

All time favorite

sangeetha senthil said...

yummy ...my favorite

01 09 10