Friday, 9 August 2013 | By: Menaga Sathia

வெல்ல புட்டு/Vella Puttu



தே.பொருட்கள்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/8 டீஸ்பூன்
நீர் - 3/4 கப் + 1/4 கப்
வெல்லம் - 3/4  கப்
தேங்காய்த்துறுவல் - 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*அரிசிமாவை வெறும் கடாயில் லேசாக வறுக்கவும்.


*3/4 கப் நீரில் மஞ்சள்தூள் + உப்பு சேர்த்து மைக்ரோவேவில் 1 நிமிடம் சூடு செய்து வறுத்த மாவில் கொஞ்சகொஞ்சமாக தெளித்து கட்டியில்லாமல் உதிரியாக பிசையவும்.

*மாவை கையால் எடுத்தால் உருண்டை பிடிக்க வரவேண்டும்,அழுத்தினால் பொலபொலவென கொட்டவேண்டும்.அதுவே சரியான பதம்.

*அதனை ஆவியில் 30-45 நிமிடங்கள் வேகவைத்து ஆறவைக்கவும்.

*வெல்லத்தை 1/4 கப் நீரில் சூடு செய்து,கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்கவைக்கவும்.


*பாகை நீரில் விட்டால் உருண்டை எடுக்கும் பதத்தில் வரவேண்டும்.

*அந்த பதத்தில் பாகை மாவில் கொட்டி கிளறி 5 நிமிடங்கள் வைக்கவும்.



* அதனுடன் தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.


11 பேர் ருசி பார்த்தவர்கள்:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, வெல்லப்புட்டு, சூப்பரோ சூப்பர். படத்தில் பர்ர்த்தாலே உதிரு உதிராக ஜோராக பதமாக உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.

எங்கள் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை வயதுக்கு வந்துவிட்டால் என்றால், அந்த மகிழ்ச்சியான செய்தியை உறவினகளுக்கு அறிவிக்க, இந்த வெல்லப்புட்டு செய்து விநியோகிப்பது வழக்கம்.

'பரிவை' சே.குமார் said...

படங்களுடன் பார்க்கவே அழகா இருக்கு.....

Unknown said...

very nice puttu recipe...

New Post at Anu's - Spinach Poori with Mirchi Chole
South Indian Cooking
Anu's Healthy Kitchen - "HOW TO's ? of Kitchen" EVENT and SHARE PAGE and a RECIPE (Paneer Celery Burji)

Shanthi said...

wonderful sweet recipe..i love the way you have presented this dish...keep rocking...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, வெல்லப்புட்டு, சூப்பரோ சூப்பர். படத்தில் பர்ர்த்தாலே உதிரு உதிராக ஜோராக பதமாக உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.

எங்கள் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை வயதுக்கு வந்துவிட்டாள் என்றால், அந்த மகிழ்ச்சியான செய்தியை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் சூசகமாக அறிவிக்க, இந்த வெல்லப்புட்டு செய்து விநியோகிப்பது வழக்கம்.

[என் பழைய பின்னூட்டத்தில் இரண்டு எழுத்துப்பிழைகள் உள்ளன. இப்போது வெளியிட்ட பிறகு தான் கவனித்தேன். அதனால் இந்த பிழைதிருத்திய பின்னூட்டம் கொடுத்துள்ளேன்.]

அன்புடன்
கோபு

great-secret-of-life said...

my fav puttu.. Love it anytime

Priya Anandakumar said...

Very very healthy putty, simply superb Menaga...

Avainayagan said...

செய்முறையை எளிதாக சொல்லியிருக்கிறீர்கள் நன்றி

Avainayagan said...

செய்முறையை எளிதாக சொல்லியிருக்கிறீர்கள் நன்றி

Unknown said...

healthy breakfast dish to start a day..looks so good and perfect

Mohideen said...

very nice. super... super...

01 09 10