இந்த ரெசிபியின் செய்முறை ரிங் முறுக்கு செய்வது போல தான் ,நான் வட்டமாக செய்வதற்கு பதில் இதய வடிவில் செய்துள்ளேன்.முறுக்கு அச்சில் ஒற்றை நாழியில் போட்டு நீளமாக பிழிந்து இதய வடிவில் ஷேப் எண்ணெயில் பொரிக்க வேண்டும்.கையால் உருட்டியும் செய்யலாம் ரொம்ப நேரமாகும்.
Recipe Source - Hotpotcooking
தே.பொருட்கள்
அரிசி மாவு -1 கப்
பாசிபருப்பு -1.5 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் -1 கப்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
எள் -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
உப்பு -1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
செய்முறை
*பாசிப்பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
*பாத்திரத்தில் தண்ணீர்+உப்பு+ஊறவைத்த பாசிப்பருப்பு+1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும்.
*கொதிக்கும் அரிசிமாவை சேர்த்து கிளறி 15 நிமிடம் மூடி வைக்கவும்.
*ஆறியதும் மிளகாய்த்தூள்+எள் சேர்த்து பிசையவும்.
*உருட்டும் போது மாவு உடைந்தால் மேலும் சிறிது வெந்நீர் சேர்த்து பிசையலாம்.
*சிறிய உருண்டை மாவு எடுத்து மெலிதாக கயிறு போல் உருட்டி இதய வடிவில் செய்யவும்.
அல்லது முறுக்கு அச்சில் போட்டு செய்யலாம்.ரொம்ப ஈசி ஆனா பிழியதான் கொஞ்ச கஷ்டமா இருந்தது.
*முறுக்கினை ஈரத்துணியால் உலராதவாறு மூடி வைக்கவும்.பின் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
This is off to Priya's Vegan Thursday
14 பேர் ருசி பார்த்தவர்கள்:
sooper o sooper
சூப்பர்,புதுமையாக செய்து அசத்தியிருக்கீங்க.பார்க்கவே ஆசையாக இருக்கு.வாழ்த்துக்கள்.
Cute murukku!!
Nice idea of making murukku
மிகவும் அழகாக செய்துள்ளீர்கள் சகோதரி...
வாழ்த்துக்கள்...
creative idea.. looks tempting
Super idea !
super heart murukku :-)
பசங்களுக்கு சாயந்தர நேர நொறுக்குத் தீனிக்கு நல்ல ரெசிபி. பகிர்வுக்கு நன்றி
Super murukku ...nice presentation dear :)
cute and nice idea Menaga... crispy and crunchy murukku...
அட்டகாசம். பார்க்கவே ருசியா இருக்கே டா மேனகா :)
Cute nad yummy murukkus..
நானும் ருசி பார்த்தேன். பல பதிவுகள் பார்த்துவிட்டேன். இனி க்ன்டாட்டம்தான் நன்றி
Post a Comment