கடலைப்பருப்பு பாயாசம் மிக்ஸ் இருந்தால் திடீர் விருந்தினர்கள் வந்துவிட்டால் 3 நிமிடங்களில் பாயாசம் செய்து அசத்தி விடலாம்.மிக சுவையானதும் கூட..இந்த மிக்ஸில் நெய்யை சூடுபடுத்தி ஊற்றி லட்டுகளாகவும் பிடிக்கலாம்.
பரிமாறும் அளவு - 5-6 நபர்கள்
தயாரிக்கும் நேரம் - 10 நிமிடங்கள்
தே.பொருட்கள்
கடலைப்பருப்பு+முந்திரி - தலா 1/4 கப்
ஏலக்காய் -5
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*வெறும் கடாயில் கடலைப்பருப்பை போட்டு மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும்.
*அடுப்பை அணைத்துவிட்டு முந்திரியை சூடான கடாயில் போட்டு வைக்கவும்.வறுக்க வேண்டாம்.
*முதலில் கடலைப்பருப்பினை மிக்ஸியில் போட்டு நைசாக பொடிக்கவும்.
*பின் சர்க்கரை+ஏலக்காய்+முந்திரி சேர்த்து நைசாக பொடிக்கவும்.
பாயாசம் செய்யும் முறை
*கடாயில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி 2 டேபிள்ஸ்பூன் மிக்ஸினை போட்டு வறுத்து சுண்ட காய்ச்சிய 1 1/2 கப் பாலினை ஊற்றி கைவிடாமல் கிளறி 5 நிமிடத்தில் இறக்கவும்.சுவையான பாயாசம் தயார்...
9 பேர் ருசி பார்த்தவர்கள்:
Romba nalla irukku Menaga.
nice idea of instant payasam mix.
Fantastic idea..i love kadalai paruppu payasam...it will try it soon...
Healthy and delicious! thanks for sharing :)
ஆஹா...சுலபமாக செய்யலாமே!
Wow very useful mix...
Super and very different instant payasam mix.
சூப்பர் ... சுலபமான செய்முறை .. ருசியோ ருசி ..
super tempting dear
Post a Comment