Tuesday 20 May 2014 | By: Menaga Sathia

கம்பு கார கொழுக்கட்டை/Kambu (Pearl Millet ) Kozhukattai | Millet Recipes | 7 Days Millet Recipes # 2


கம்பு பயன்கள்

*இதில் புரதம்,கொழுப்புசத்து,தாது உப்புக்கள்,நார்ச்சத்து மற்றும் மாவுசத்து இருக்கு.
*உடல் உஷ்ணமடைய செய்வதை தடுக்கிறது.
*வயிற்றுப்புண் மற்றும் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது.
*உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்,நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்.
*கண் நரம்புகளுக்கு புத்துணர்வை தந்து பார்வையை தெளிவாக்கும்..

தே.பொருட்கள்

கம்பு -1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1 சிறியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
இஞ்சித்துறுவல் -1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு -1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை

*கம்பை 2 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

*பின் ஈரம் போக துணியில் நன்கு உலர்த்தி மிக்ஸியில் கொரகொரப்பாக பொடிக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி சேர்த்து வதக்கவும்.

*பின் வெங்காயம் வதங்கியதும் உப்பு+2 1/2 கப் நீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

*நீர் கொதிக்கும் போது பொடித்த கம்பினை தூவி நன்கு வேகவைத்து இறக்கவும்.

*ஆறியதும் உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*இதனை அப்படியே சாப்பிடலாம்,விரும்பினால் காரசட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

பி.கு

*இதில் கம்புக்கு பதில் கம்பு மாவினை பயன்படுத்தலாம்.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya Suresh said...

Kambu kozhukattai summa kalakuthu ponga..Super healthy snacks.

மனோ சாமிநாதன் said...

நல்லதொரு சத்தான குறிப்பு!!

great-secret-of-life said...

healthy snack

01 09 10