மிசல் செய்வதற்கு தே.பொருட்கள்
வெள்ளை அல்லது பச்சை பட்டாணி - 1/2 கப்
வரமிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம்+தக்காளி - 1 பெரியது
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*காய்ந்த பட்டானியை முதல்நாள் இரவே ஊறவைக்கவும்.
*குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டு விழுது+வெங்காயம்+தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
*பின் தூள் வகைகள்+உப்பு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.*பின் ஊறவைத்த் பட்டாணி+3 கப் நீர் சேர்த்து 4 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
*ப்ரெஷர் அடங்கியதும் லேசாக மசித்து 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து எடுத்தால் மிசல் ரெடி!!
*மிசல் நீர்க்க இருந்தால் தான் ஒமப்பொடிசேர்க்கும் போது சரியாக இருக்கும்.
மிசல் பாவ் செய்வதற்கு தே.பொருட்கள்
மிசல் - தேவைக்கு
பாவ் பன் -2
எலுமிச்சை பழத்துண்டுகள் -2
ஓமப்பொடி -மேலே தூவ
பொடியாக நறுக்கிய வெங்காயம்+கொத்தமல்லித்தழை - தலா 1 டேபிள்ஸ்பூன்
பரிமாறும் முறை
*தட்டில் மிசலை ஊற்றி அதன் மேல் ஓமப்பொடி ,நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லித்தழை தூவி எலுமிச்சை சாறு பிழிந்து பாவ் பன்னு
டன் பரிமாறவும்.
8 பேர் ருசி பார்த்தவர்கள்:
yummy................
Pasi timela unga blog pakkame varakudathu, ippadiye tempt pannuvinga, misal pav paathathum yennaku yenga veetula dinner pudikala..
Going to try this week for sure... Very tempting...
looks yumm..
one of my fav chat.. looks yum
ஓகே.இதுதான் மிசல் பாவ். இன்னிக்கு செய்துடலாம்.நன்றி ஸாதிகா.
i love chaat items very much..i would like to taste it..keep rocking..
Missal Pav looks tempting..
Post a Comment