Tuesday 15 July 2014 | By: Menaga Sathia

செட்டிநாடு வாழைக்காய் கோலா உருண்டை/ Chettinad Vazhakkai Kola Orundai | Vegetarian Balls|Vegetarian Appetizer Recipes

வாழைக்காய் கோலா உருண்டையை ,நான் வாழைக்காயை வேகவைத்து தோலுரித்து வெங்காயம் பச்சை கறிவேப்பிலை சோம்புத்தூள் இவற்றை மற்றும் பொடியாக நருக்கி சேர்த்து எண்ணெயில் பொரிப்பேன்.இதில் பொருட்களை வதக்கி அரைத்து செய்வததில் நன்றாக இருந்தது.

இதில் வாசனைக்காக நான் கிராம்பும் பட்டையும் சேர்த்து செய்துள்ளேன்.

Recipe Source : Cook Like Priya

தே.பொருட்கள்

வாழைக்காய் -3 நடுத்தர அளவு
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு -1/4 கப்
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -பொரிக்க‌

எண்ணெயில் வதக்கி அரைக்க‌

எண்ணெய் -1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -10
பச்சை மிளகாய்- 2
காய்ந்த மிளகாய்- 2
சோம்பு- 1 டீஸ்பூன்
கசகசா -1 டீஸ்பூன்
தேங்காய்த் துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி -1 சிறுதுண்டு
பூண்டுப்பல்- 4
கறிவேப்பிலை -1 கொத்து
பட்டை -சிறுதுண்டு
கிராம்பு -2


செய்முறை
*1 வாழைக்காயை 4ஆக நறுக்கி மஞ்சள்தூள் +முழ்குமளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*கத்தியில் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஆறியதும் தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வதக்கி ஆறியதும் நைசாக அரைக்கவும்.

*இதனை மசித்த வாழைக்காயுடன் சேர்த்து உப்பு+பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசையவும்.

*மாவு தளர்த்தியாக இருந்தால் மேலும் பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசையவும்.

*உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பி.கு

*பொட்டுக்கடலை மாவுக்கு பதில் கடலைமாவினை வறுத்து சேர்க்கலாம்.

*பட்டை கிராம்பு சேர்ப்பது வாசனையாக இருக்கும்.

10 பேர் ருசி பார்த்தவர்கள்:

மனோ சாமிநாதன் said...

ரொம்பவும் வித்தியாசமான குறிப்பு மேனகா! சுவையும் அபாரமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

great-secret-of-life said...

yummy snack.. yes for sure cannot stop at one

Sangeetha Nambi said...

Want to try this ! Bookmarked

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவரை இதுபோல் செய்ததில்லை... நன்றி சகோதரி...

Gita Jaishankar said...

Sounds and looks very tasty dear...bookmarked :)

அமுதா கிருஷ்ணா said...

வாழைப்பூ,மட்டன்,கேரட்,சேனைக்கிழங்கில் இந்த வடை செய்து இருக்கேன். வாழைக்காய் இப்ப தான் கேள்வி படுகிறேன். ட்ரை செய்யணும்.

nandoos kitchen said...

nice yummy snack..

'பரிவை' சே.குமார் said...

செட்டிநாடு வாழைக்காய் கோலா உருண்டை...

ஆஹா... படத்துடன் அருமையா சொல்லியிருக்கீங்க அக்கா...

Niloufer Riyaz said...

loved this recipe!!

Sangeetha Priya said...

delicious n well made!!!

01 09 10