Tuesday 1 July 2014 | By: Menaga Sathia

பட்டர் சிக்கன் /Butter Chicken | Side Dish For Naan OR Roti

தே.பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் ‍- 1/2 கிலோ
வெங்காயம் -1 பெரியது
தக்காளி - 1 பெரியது
கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பால்/ப்ரெஷ் க்ரீம்-  1/4 கப்
சர்க்கரை  -1 டீஸ்பூன்
முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

சிக்கனில் ஊறவைக்க‌

வரமிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 3/4 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்

தாளிக்க‌

கிராம்பு -3
ஏலக்காய் -2

செய்முறை

*சிக்கனை சுத்தம் செய்து நீரை நன்கு வடிகட்டி ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பின் அவனில் 270°C  10 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*வெங்காயத்தை தோலுரித்து முழுதாக கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு எடுக்கவும்.அதே நீரில் முந்திரியையும் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.

*தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோலுரித்து வைக்கவும்.

*பின் ஆறியதும் வெங்காயம்+தக்காளி+முந்திரி சேர்த்து நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் கிராம்பு+ஏலக்காய் சேர்த்து தாளித்து அரைத்த வெங்காயதக்காளி விழுது+மிளகாய்த்தூள் +உப்பு+தேவைக்கு நீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடம்.


*பின் க்ரில் சேர்த்த சிக்கன்+கசூரி மேத்தி சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

*பின் பால் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவைத்து சர்க்கரை சேர்த்து இறக்கவும்.
*பட்டர் நாணுடன் பரிமாறியிருக்கேன்

பி.கு

*ப்ரெஷ் க்ரீம் சேர்க்கும் போது கொதிக்கவைக்ககூடாது.ஊற்றியதும் இறக்கிவிடவும்.

*சர்க்கரை சேர்ப்பது சுவையைக் கொடுக்கும்.

*அவன் இல்லாதவர்கள் சிக்கனை க்ரில் செய்வதற்கு பதில் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சிக்கனை போட்டு 10 நிமிடங்கள் வதக்கி எடுத்து தனியாக வைத்து பின் அதே கடாயில் மீதள்ள செய்முறையை போல் செய்யவும்.

*விரும்பினால் க்ரேவி கொதிக்கும் போது ரெட் கலர் சேர்க்கலாம்.

5 பேர் ருசி பார்த்தவர்கள்:

Shama Nagarajan said...

delicious tempting chicken gravy,,,

'பரிவை' சே.குமார் said...

பட்டர் சிக்கன் பார்க்கும் போதே இழுக்கிறது அக்கா...

Niloufer Riyaz said...

mouthwatering gravy!!

Unknown said...

Awesome butter chicken, looks so creamy and yum.

Priya Suresh said...

Fingerlicking butter chicken, who can resist to this mouthwatering dish.Inviting!

01 09 10