PRINT IT
இது வடஇந்தியாவின் ஸ்பெஷல் பானகம்.மஹாசிவராத்திரி மற்றும் ஹோலி அன்று செய்வார்கள்.
தண்டை மசாலா பொடியினை மொத்தமாக பொடித்து வைத்துக் கொண்டால் தேவையான போது செய்யலாம்.
நான் கொஞ்சமாக செய்ததால் மசாலாவினை அரைத்து செய்துள்ளேன்.
Recipe Source : Tarladalal
தே.பொருட்கள்
பால் -3 கப்
சர்க்கரை -1/2 கப்
குங்குமப்பூ -சிறிதளவு
பிஸ்தா பருப்பு -அலங்கரிக்க
ரோஸ் எசன்ஸ் -2 துளி (விரும்பினால்)
தண்டை மசாலா செய்ய
பாதாம் பருப்பு -30
மிளகு -15
கசகசா+சோம்பு -தலா 1 1/2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் -7
செய்முறை
*பாலினை காய்ச்சி சர்க்கரை சேர்த்து ஆறவைக்கவும்.
*சிறிதளவு வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை கலந்து வைக்கவும்.
*தண்டை மசாலா செய்ய கொடுத்துல்ள பொருட்களை 1/2 மணிநேரம் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.
*பால் ஆறியதும் மசாலாவினை சேர்த்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.
*பின் அதனை சூப் வடிகட்டியில் வடிகட்டி ரோஸ் எசன்ஸ்+குங்குமப்பூவை கலந்து ப்ரிட்ஜில் வைக்கவும்.
*பரிமாறும் போது பிஸ்தா பருப்பு கலந்து பரிமாறவும்.
பி.கு
*தண்டை மசாலாவினை சேர்ததும் 30 நிமிடம் வைத்திருந்து வடிகட்டினால் மசாலாவின் மணம் நன்கு ஊறியிருக்கும்.
*எப்போழுதும் குளிரவைத்து பரிமாறவும்.
*ரோஸ் எசன்ஸ் சேர்ப்பது நல்ல மணம் கொடுக்கும்.சிலர் காய்ந்த ரோஜா இதழ்களை சேர்ப்பார்கள்.
5 பேர் ருசி பார்த்தவர்கள்:
மிக அருமை
ருசியான குறிப்பு. செய்து பார்க்கிறேன்.
Masala badam paal arumai, never tried this before, looks yummy!
சூப்பரா இருக்கு பார்க்கவே. கண்டிப்பா செய்கிறேன் மேனகா.
அருமை...
வலைச்சர ஆசிரியரானதற்கு வாழ்த்துக்கள்.
Post a Comment