PRINT IT
இன்றோடு வலைப்பூவில் எழுத தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.ஊக்கமளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல !!
தே.பொருட்கள்
பாதாம் பவுடர் - 1/2 கப்
சர்க்கரை -1/2 கப்
நீர் -2 டேபிள்ஸ்பூன்
நெய்- 1 டீஸ்பூன்
செய்முறை
*பலகை அல்லது தட்டில் சிறிது நெய் தடவி வைக்கவும்.
*நான் ஸ்டிக் கடாயில் சர்க்கரை+நீர் சேர்த்து கரைய விடவும்.
*சர்க்கரை நன்கு கரைந்ததும் 1 கம்பி பதம் எடுக்கவும்.
*1 கம்பி பதம் என்பது சர்க்கரை பாகினை தொட்டால் 2 விரல்களுக்கு இடையே 1 நூலிழைப்போல வரும்.
*அப்போழுது பாதாம் பவுடர் தூவி கட்டியில்லாமல் கலக்கவும்.
*2 -3 நிமிடங்களுக்கு பிறகு மாவினை எடுத்து உருட்டி பார்த்தால் பந்து போல உருட்டும் பதத்தில் வரவேண்டும்.
*அப்படி வரும் போது உடனே நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
*கை பொறுக்கும் சூட்டில் மிருதுவாக பிசையவும்.
*பட்டர் பேப்பரில் உருண்டையை வைத்து அதன் மேல் இன்னொரு பட்டர் பேப்பர் வைத்து 1 இஞ்ச் அளவிற்கு உருட்டவும்.
*பின் விருப்பமான வடிவில் துண்டுகள் போடவும்.நான் வட்ட வடிவத்தில் துண்டுகள் போட்டுள்ளேன்.
*இதில் பால் சேர்க்காததால் அறைவெப்பநிலையில் 1 வாரம்வரை வைத்திருக்கலாம்.
பி.கு
*நான் ரெடிமேட் பாதாம் பவுடர் பயன்படுத்தியிருக்கேன்.
*பாதாம் பவுடர் இல்லையெனில் 1/2 கப் பாதாமை சுடுநீரில் ஊறவைத்து தோலுரிக்கவும்.பின் ஈரம்போக துணியில் நன்கு உலர்த்தி மிக்ஸியில் பல்ஸ் மோடில் நிறுத்தி நிறுத்தி பொடிக்கவும்.தொடர்ந்து பொடித்தால் பாதாமிலிருந்து எண்ணெய் வரும்.கொஞ்சம் கொரகொரப்பாக இருந்தால் பரவாயில்லை பர்பி வெந்து மிருதுவாக பிசையும் போது சரியாக இருக்கும்.
*பால் ஊற்றி அரைத்தால் சுவையில் நிச்சயம் வேறுபாடு இருக்கும்.
*கத்லி பிசையும் போது கொஞ்சம் டிரையாக இருந்தால் 1 டீஸ்பூன் பால் விட்டு பிசையலாம்.
*அப்படி பால் விட்டு பிசையும் போது பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தவும்.
*சர்க்கரை பாகுபதம் மிக முக்கியம்,பதம் தவறிவிட்டால் கத்லி சரியாக வராது.
*பிசையும் போது உருண்டை ஒட்டினால் சிறிது நெய் தடவி பிசையலாம்.
8 பேர் ருசி பார்த்தவர்கள்:
congrats on the milestone.. It is nice way to mark it..
6 ஆண்டுகள் நிறைவுக்கு வாழ்த்துக்கள் மேனகா.
பாதாம் பர்பி உடனே செய்து சாப்பிடும் போல இருக்கு. ஈசியாகவும் குறிப்பு. செய்துபார்க்கிறேன்.நன்றி.
பாதாம் பர்பிகள் செய்முறையும் அதற்கான படங்களும், பார்க்கவே நாக்கினில் நீர் சுரக்க வைப்பதாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.
வலைப்பூ தொடங்கி ஆறு ஆண்டுகள் நிறைவுபெற்ற விழாவுக்கு வாழ்த்துகள்.
அதற்கு ஏற்ற ஸ்வீட்ஸ் பதிவு மிகவும் பொருத்தமே .... பாராட்டுக்கள்.
ஆறு ஆண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள். பாதாம் கத்லி செய்முறை அறிந்தேன். ஒரு முறை செய்து பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்!
Congrats on your milestone akka.. Badam burfi looks amazing
Wow Congrats! Perfect sweet for celebrating special days.
Congrats Menaga! Nice badam katli, mouth watering!
Post a Comment