ஓணம் சத்யாவின் போது பரிமாறப்படும் முக்கிய மெனு.நார்த்தங்காயில் இந்த ஊறுகாய் செய்வார்கள்.கிடைக்கவில்லை எனில் சாதரண எலுமிச்சையில் செய்யலாம்.
ப்ரிட்ஜில் 2 வாரங்கள் வரை வைத்திருக்கலாம்.
Recipe Source : Here
தே.பொருட்கள்
எலுமிச்சை 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -5
கறிவேப்பிலை- 2 கொத்து
மிளகாய்த்தூள்- 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயப்பொடி+பெருங்காயப்பொடி- தலா 1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
கடுகு- 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*எலுமிச்சையை பொடியாக நறுக்கி கறிவேப்பிலை+பச்சை மிளகாய்+கறிவேப்பிலை கலந்து வைக்கவும்.
*பின் 1 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.மிளகாய்த்தூள்+வெந்தயப்பொடி+பெருங்காயப்பொடி+உப்பு சேர்க்கவும்.
*நன்றாக வெந்து கெட்டியாக வரும் போது இறக்கவும்.
*ஆறியதும் சுத்தமான பாட்டிலில் வைத்திருந்து பயன்படுத்தவும்.
2 பேர் ருசி பார்த்தவர்கள்:
ஊறுகாய் குறிப்பு அருமை!
வணக்கம்
இலகுவான செய்முறை விளக்கம். பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment