Friday, 11 September 2015 | By: Menaga Sathia

வாங்கிபாத் மசாலா பொடி / Vangibath Masala Powder | Authentic Mysore Style Vangibath Masala Powder


print this page PRINT IT
பிஸிபேளாபாத் மசாலா பொடி செய்த அதே வீடியோவில் பார்த்த செய்த குறிப்பு.மிக நன்றாக இருந்தது.

இதில் உருளை வறுவல் செய்ததில் மிக நன்றாக இருந்தது.காஷ்மிரி மிளகாயை பயன்படுத்துவது நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

இதில் கொப்பரைத்துறுவல் சேர்க்காததால் ப்ரிட்ஜில் 2 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

நான் எப்போழுதும் குறைந்த அளவே மசாலா பொருட்களை அரைத்து உடனடியாக பயன்படுத்தி விடுவேன்.அவர்கள் கொடுத்துள்ள அளவில் நான் ஸ்பூன் அளவில் பயன்படுத்தி அரைத்ததே கால் கப்பிற்கும் கூடவே இருந்தது.

தே.பொருட்கள்

தனியா -1 1/2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு -3/4 டேபிள்ஸ்பூன்
வெ.உளுத்தம்பருப்பு -3/4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 2
காஷ்மிரி மிளகாய்- 4
கிராம்பு -5
பட்டை 1 இஞ்ச் அளவில்- 2
எண்ணெய் -1 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கடாயில் எண்ணெய் ஊற்றி முதல் கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

*பின் பட்டை +கிராம்பு சேர்த்து வறுத்த பின் மிளகாயினை சேர்த்து வறுக்கவும்.

*கடைசியாக தனியாவை சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை அணைக்கவும்.கடாயின் சூட்டிலேயே தனியா வறுபட்டுவிடும்.

*ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.

*அரைத்த பொடியினை நன்கு ஆறவைத்த பின் காற்றுப்புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.

2 பேர் ருசி பார்த்தவர்கள்:

'பரிவை' சே.குமார் said...

ம்... செய்து பார்க்கலாம்...

Unknown said...

Sooper yummmm

01 09 10