Saturday, 14 September 2013 | By: Menaga Sathia

எரிசேரி /Erissery With Yam | Onam Sadya Recipes

தே.பொருட்கள்

சேனைக்கிழங்கு துண்டுகள் - 1 1/2 கப்
வாழைக்காய் - 1
மஞ்சள் தூள்  -1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
நீர் - 1 கப்
துருவிய தேங்காய் -  1/4 கப் + 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவைக்கு

செய்முறை

*வாழைக்காயை தோல் சீவாமல் சிறு துண்டுகளாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் வாழைக்காய் துண்டுகள்+சேனைக்கிழங்கு துண்டுகள்+உப்பு+நீர்+மிளகுத்தூள் சேர்த்து வேகவிடவும்.

*1/4 கப் தேங்காய்துறுவலுடன் சீரகம் சேர்த்து மைய அரைத்து காய்கள் வெந்ததும் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

*வேறொரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+கறிவேப்பிலை சேர்த்து தாலித்து மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்துறுவலை பொன்முறுவலாக வறுத்து சேர்க்கவும்.

பி.கு

வாழைக்காயை தோல் சீவினால் காய் குழைந்துவிடும்.


Friday, 13 September 2013 | By: Menaga Sathia

ஒலன் /Olan |Onam Sadya Recipes



தே.பொருட்கள்

நறுக்கிய வெண்பூசணி துண்டுகள் - 250 கிராம்
வேகவைத்த காராமணி -  1/4 கப்
முதலாம் தேங்காய்ப்பால் - 1/4 கப்
இரண்டாம் தேங்காய்ப்பால் - 1 கப்
கீறிய பச்சை மிளகாய் -3
கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு  - தேவைக்கு

செய்முறை

*இரண்டாம் தேங்காய்ப்பாலில் பூசணிதுண்டுகள்+உப்பு +பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும்.

*காய் வெந்ததும் காராமணி சேர்க்கவும்.

*க்ரேவி திக்கான பதம் வந்ததும் முதலாம் தேங்காய்ப்பால்+கறிவேப்பிலை+தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கவும்.

*சூடான சாதம்+காரகுழம்புடன் பரிமாற நன்றாக இருக்கும்.

பி.கு
*முதலாம்பால் சேர்த்ததும் க்ரேவியை கொதிக்கவிடக்கூடாது.

*பூசணிக்காய் சீக்கிரம் வெந்துவிடும்.குழைய வேகவிடாமல் 3/4 பதம் வெந்தால் போதும்.







Thursday, 12 September 2013 | By: Menaga Sathia

மட்டன் கடலைப்பருப்பு குழம்பு /Spicy Mutton Gravy With Channa Dal (Mutton Kadalaiparuppu Kuzhambu)

இந்த குழம்பைசெய்வதற்கு எல்லா பொருட்களையும் அரைத்து வைத்துக் கொண்டால் செய்வதற்கு மிக சுலபம்.

இதில் பூண்டினை விட இஞ்சியின் அளவை அதிகம் சேர்க்க வேண்டும்.வெங்காயத்தினை கொரகொரப்பாக அரைக்கவேண்டும்,நைசாக அரைத்தால் கசப்புதன்மை வரும்.

அவரவர் விருப்பதிற்கு போல் கிரேவியினை கெட்டியாகவோ நீர்க்கவோ செய்துகொள்ளவும்.எங்களுக்கு கெட்டியாக பிடிக்கும் என்பதால் நீரின் அளவினை குறைத்து செய்துள்ளேன்.

மேலும் இதில் எண்ணெயும் குறைவாக சேர்த்து சமைத்தாலே போதும்.இதில் வெங்காயம் மர்றும் இஞ்சி பூண்டினை பச்சையாக சேர்க்க விரும்பாதவர்கள் தக்காளி வதக்குவதற்கு முன் இவற்றை வதக்கி சேர்க்கலாம்.


இதில் முருங்கைகாயும் சேர்த்து செய்துள்ளேன்,மிக நன்றாக இருந்தது.

சாதம்,சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்..

Recipe Source :என் சமையல் அறையில்

தே.பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ
கடலைப்பருப்பு -  1 கைப்பிடி
உருளைக்கிழங்கு -  1 பெரியது
முருங்கைக்காய் - 1
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியத்தூள் -  1 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கரிவேப்பிலை - 1 கொத்து
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு

தாளிக்க‌

எண்ணெய் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
தக்காளி - 2(சிறியது _ பொடியாக நறுக்கியது)

அரைக்க‌

வெங்காயம் - 1
இஞ்சி - 2 பெரிய துண்டு
பூண்டுப்பல் - 5
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை

*மட்டனை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும்.கடலைப்பருப்பினை கழுவிக் கொள்ளவும்.


**குக்கரில் கடலைப்பருப்பு+மட்டன் தூள் வகைகள் சேர்க்கவும்.
*முழ்குமளவு நீர் விட்டு 3 விசில் வரை வேகவைக்கவும்.

*வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி ஒன்றும் பாதியுமாக அரைக்கவும்.

*இஞ்சி பூண்டினை கொரகொரப்பாக அரைக்கவும்.

* தேங்காய் + சோம்பு இவற்றினை மைய அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து நறுக்கிய தக்காளியை சேர்த்து லேசாக அவதக்கவும்.

*மட்டன் வெந்ததும் அரைத்த வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+வதக்கிய தக்காளி கலவை சேர்க்கவும்.
*பின் நறுக்கிய முருங்கைக்காய் துண்டுகள்+தோல் சீவி துண்டுகளாகிய உருளை சேர்க்கவும்.

*இதனுடன் தேங்காய் விழுது+உப்பு சேர்த்து தேவைக்கு நீர் சேர்க்கவும் மீண்டும் குக்கரில் 2 விசில் வரை வேகவைத்தெடுக்கவும்.

*காய்கள் வெந்ததும் கறிவேப்பிலை+கொத்தமல்லி சேர்க்கவும்.




Monday, 9 September 2013 | By: Menaga Sathia

வேர்கடலை சுண்டல் /Peanut Sundal


தே.பொருட்கள்

வேர்கடலை - 1 கப்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க‌

கடுகு+உளுத்தம்பருப்பு  - தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை -  1 கொத்து
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*குக்கரில் வேர்கடலை உப்பு சேர்த்து முழ்குமளவு நீர் ஊற்றி 3 விசில் வரை வேகவைத்து நீரை வடிக்கவும்.


*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து வேகவைத்த வேர்கடலையை சேர்க்கவும்.


*பின் தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.
Thursday, 5 September 2013 | By: Menaga Sathia

Homemade Rice Ada(Rice Flakes) For Ada Pradhaman

Recipe Source: Erivum Puliyum


தே.பொருட்கள்

பச்சரிசி  - 1/2 கப்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
வாழையிலை  - 1

செய்முறை


*அரிசியை ஊறவைத்து உப்பு+நீர் சேர்த்து மைய அரைக்கவும்.


*மாவு பதம் இட்லிமாவு போல் இருக்கவேண்டும்,நீர்க்க இருக்ககூடாது.


*வாழையிலையின் பின் பக்கம் தே.எண்ணெய் தடவி,இலையின் முன் பக்கத்தில் மாவை மிக மெல்லியதாக தேய்க்கவேண்டும்.


*அப்படியே மெதுவாக சுருட்டி வாழைநார் சேர்த்துகட்டி ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.


*ஆறியதும் சிறுதுண்டுகளாக வெட்டி பயன்படுத்தலாம்.


பி.கு

*தே.எண்ணெய் தடவுவதால் அடை நல்ல வாசனையாகவும்,பளபளப்பாகவும் இருக்கும்.


*அரிசியை ஊறவைத்து அரைப்பதற்க்கு பதில் அரிசி மாவை பயன்படுத்தலாம்.

*இதனை ஆவியில் வேகவைத்தற்க்கு பதில் மேற்சொன்ன முறையில் மாவை அரைத்து இலையில் தடவி கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து பயன்படுத்தலாம்,ஆனால் இந்த முறையில் செய்யும் போது உடனே பயன்படுத்தவேண்டும்.

This is off to Priya's Vegan Thursday...
Monday, 2 September 2013 | By: Menaga Sathia

பஞ்சாபி ஸ்வீட் லஸ்ஸி/ Punjabi Sweet Lassi



தே.பொருட்கள்

தயிர் - 1 கப்
சர்க்கரை  - 2 டேபிள்ஸ்பூன்
ரோஸ் எசன்ஸ்-  1/2 டீஸ்பூன்
பால் - 1/2 கப்
ப்ரெஷ் க்ரீம் - 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ - 1/4 டீஸ்பூன்

செய்முறை

* மிக்ஸியில் தயிர்+பால்+க்ரீம்+சர்க்கரை+ரோஸ் எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

*குங்குமப்பூவை சிறிது சூடான பாலில் கலந்து லஸ்ஸியில் கலந்து பருகவும்.
01 09 10