தே.பொருட்கள்:
வெண்டைக்காய் - 1/4 கிலோ
எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - 1 சிறியது
தேங்காய் துருவல் - 1/4 கப்
உப்பு,எண்ணெய் - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
தாளிக்க:
கடுகு+உளுத்தம்பருப்பு = 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
வெங்காயம்+பச்சைமிளகாய்+வெண்டைக்காயை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடையில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள் பொருட்களை தாளித்து வெங்காயம்+ப.மிளகாய் போட்டு வதக்கவும்.
வதங்கியபின் வெண்டைக்காயைப் போட்டு வதக்கவும்.நடுவில் சிறிது எலுமிச்சை சாறு + எண்ணெய் சேர்த்து வதக்கவும்.
எலுமிச்சை சாறு சேர்ப்பதால் எண்ணெய் அதிகம் செலவாகாது.தண்ணீர் சேர்த்து வதக்க கூடாது.
வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் உப்பு+தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
இந்த வெண்டைக்காய் பொரியல் புளிப்பு சுவையுடன் நன்றாக இருக்கும்.
பி.கு எலுமிச்சை சாறுக்கு பதில் புளிசாறு அல்லது தயிர் சேர்த்தும் செய்யலாம்.
4 பேர் ருசி பார்த்தவர்கள்:
தயிர் நல்ல தேர்வு ...
தங்கள் கருத்துக்கு நன்றி ஜமால்!!
நல்ல ரெசிப்பி எலுமிச்சை சாறு சேர்ப்பது புதுசாக இருக்கு.
எலுமிச்சைசாறு சேர்ப்பதால் எண்ணெய் அதிகம் செலவாகாது.நீங்களும் செய்து பாருங்க.
Post a Comment