Monday, 30 March 2009 | By: Menaga Sathia

கிள்ளு மிளகாய் சாம்பார்


தே.பொருட்கள்:

துவரம்பருப்பு - 1கப்
புளி - 1 எலுமிச்சைபழ அளவு
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
பூண்டு - 10 பல்
கொத்தமல்லித்தழை - சிறிது
பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் - தேவைக்கேற்ப

தாளிக்க:

கடுகு + உளுத்தம்பருப்பு = 1 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*பருப்பை லேசாக வெறும் கடாயில் வாசனை வரும்வரை வறுத்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*ஊறியதும் அத்துடன் மஞ்சள்தூள்,உரித்த பூண்டுப்பல் சேர்த்து சரியான அளவு நீர் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கவும்.பச்சைமிளகாயை நீளவாக்கில் அரியவும்.காய்ந்த மிளகாயை கிள்ளிவைக்கவும்.

*புளியை 1/2 கோப்பையளவு நீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

*பின் வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாயை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*5நிமிடம் கொதித்ததும் வெந்தபருப்பை சேர்த்து நன்கு கலக்கி சிறிது நேரம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

எனக்கு சாம்பார் மட்டும் இருந்தாலே போதும்.இதற்க்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய்,அப்பளம்,வறுவல் வகைகள் அனைத்தும் சூப்பரா இருக்கும்.என் அம்மா செய்யும் சாம்பார் வகையில் இதுவும் ஒன்று.

11 பேர் ருசி பார்த்தவர்கள்:

Malini's Signature said...

பேரு புதுசா இருக்கே .... என் அம்மாவும் பன்னுவாங்கபா ஆனா பருப்பு வருத்து ஊற வைக்க மாட்டாங்க நான் ட்ரை பன்னி பாக்குரேன்...

அப்புறம் உங்க டிசைன் நல்லா இருக்குபா.

Unknown said...

மேனகா மாற்றங்கள் எல்லாம்ரொம்ப சூப்பராக இருக்கு.
2 நாட்களாக நெட் பிராபளம் அதான் வரமுடியவில்லை.
சாம்பாரும் சுப்பராக இருக்கு

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை!

Menaga Sathia said...

ஹர்ஷினி அம்மா,பாயிசா,ஜோதிபாரதி தங்கள் அனைவருடைய கருத்துக்கும் நன்றி.இந்த டிசைன் என் சகோதரரின் உதவியால் டவுன்லோட் செய்தேன்.அனைத்து விளக்கங்களும் சொல்லித் தந்தார்.அவருக்கு என் கோடி நன்றிகள்!!

Unknown said...

unga samaiyal ellam superah irukku.
butter cake eppadi seiyanum? terintal sollungalen.

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கும்,வருகைக்கும் க்மிக்க நன்றி லட்சுமி.பட்டர் கேக் ரெசிபி விரைவில் தருகிறேன்ப்பா.இப்ப டயட்டில் இருப்பதால் இதெல்லாம் மூட்டை கட்டியாச்சு.விரைவில் குடுக்கிறேன்.

sam said...

Hi,
sambar super......
Thanga chatini hotelgalil mattum supera sairaga..but nama panna antha taste varamatanguthu..

Please atha pathi sollurigala...

sam...

Revathyrkrishnan said...

எங்க வீட்லயும் இது பண்ணுவாங்க மேனகா... மிளகாய் கிள்ளி சாம்பார்ன்னு சொல்லுவாங்க. இட்லி தோசைக்கு சைட் டிஷ்ஷா பண்ணுவாங்க,,, எதற்காக வறுத்து பின் ஊற வைக்கணும்? எப்பவும் போல செய்ய கூடாதா?

Menaga Sathia said...

சாம் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.ஹோட்டலில் தேங்காய் சட்னி அரைக்கும் போது சிறிது புளி சேர்த்து அரைப்பாங்க..அதுமட்டுமில்லாமல் சட்னி அரைக்கும் போது தேங்காய் உடைத்த நீர் நன்றாக இருந்தால் அதை ஊற்றி அரைத்தாலும் சுவையாக இருக்கும்...

Menaga Sathia said...

ரீனா, எங்க வீட்ல கிள்ளு மிளகாய் சாம்பார்ன்னு தான் சொல்வோம்..அல்லது வெறும் சாம்பார்ன்னு சொல்லுவோம்.பருப்பை வறுத்து ஊறவைத்து செய்தால் பருப்பும் சீக்கிரம் வேகும்,சாம்பாரும் நல்லா வாசனையாவும் இருக்கும்,நீங்களே வித்தியாசத்தை உணருவீங்க..

Revathyrkrishnan said...

சரிங்க மேனகா... அனுபவம் பேசுது :)))

01 09 10