Friday, 24 April 2009 | By: Menaga Sathia

மீன் கட்லட்


தே.பொருட்கள்:

தூனா மீன் - 1 டின்
வேகவைத்த உருளைக் கிழங்கு - 2
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு +எண்ணெய் = தேவையான அளவு
முட்டை - 1
ரஸ்க்தூள் - பிரட்டுவதற்க்கு
சோம்புத்தூள் - 11/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

செய்முறை:

*மீனில் இருக்கும் தண்ணீயை பிழிந்து வைக்கவும்,உருளைக்கிழங்கை மசித்து வைக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாயை பொடியாக அரியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு சோம்புத்தூள்+வெங்காயம்+மிளகாய்+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் மீன்+உருளைக்கிழங்கு சேர்த்து
கலவை ஓன்றாகும் வரை நன்கு பிரட்டவும்.

*உப்பு பார்த்து போடவும், மீனில் ஏற்கனவே உப்பு இருக்கும்.கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு ஆறவிடவும்.

*முட்டையை நன்கு அடித்து வைக்கவும்.ஒரு தட்டில் ரஸ்க்தூள் வைக்கவும்.

*மீன் கலவையை நமக்கு விருப்பமான வடிவில் செய்து முட்டையில் நனைத்து ரஸ்க்தூளில் நன்கு பிரட்டி வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு கட்லட்டை இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்கவும்.

*கெட்சப்,மிளகாய் சாஸுடன் சூடாக பரிமாறலாம்.

பி.கு:
நான் உருண்டையாக உருட்டியதில் 12 கட்லட் வந்தது.தூனா மீனை பிரெஞ்சில் Thon poisson என்று சொல்வாங்க.


8 பேர் ருசி பார்த்தவர்கள்:

Malini's Signature said...

என்னப்பா அசைவம் சாப்பிட ஆரம்பிச்சாச்ச்சா!!! ஒரே கலக்கலா இருக்கு!!!

Menaga Sathia said...

நன்றி ஹர்ஷினி!!ஆமாம்பா அசைவம் சாப்பிட ஆரம்பித்து 10நாளுக்கு மேலாகுது.

தாஜ் said...

super menaga super

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி தாஜ்!!

GEETHA ACHAL said...

மீன் கட்லட் அருமை. செய்தேன். சுவைத்தேன்…அருமையான குறிப்புக்கு நன்றி.

Menaga Sathia said...

ஓஒ செய்துபார்த்திங்களா,நல்லா இருந்தது என சொல்லும் போது ரொம்ப சந்தோஷம் கீதா.

வேலன். said...

துானா மீன் இங்கு கிடைப்பதில்லை.நாங்கள் வருகின்றோம் மறக்காமல் எடுத்துவையுங்கள் சகோதரி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

Menaga Sathia said...

நன்றி சகோ!! தாராளமாக வாங்க செய்து தருகிறேன்...இதே போல் சுறாமீனில் செய்யலாம்..

01 09 10