Monday 11 May 2009 | By: Menaga Sathia

மீன் பகோடா

தே.பொருட்கள்:

தூனா மீன் - 1 டின்
பொட்டுக்கடலை மாவு - 1 கப்
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
கொத்தமல்லித்தழை - சிறிது
வெங்காயம் -1
முட்டை - 1
பச்சை மிளகாய் - 2
சோம்புத்தூள் - 1டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
செய்முறை:

*வெங்காயம்+பச்சை மிளகாய்+கொத்தமல்லித்தழை அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

*மீனில் இருக்கும் தண்ணீயை பிழிந்துக் கொள்ளவும்.

*ஒரு பாத்திரத்தில் மீன்+உப்பு+மாவு வகைகள்+மிளகாய்த்தூள்+முட்டை+சோம்புத்தூள்+நறுக்கிய வெங்காயம்+கொத்தமல்லித்தழை+பச்சைமிளகாய் அனைத்தையும் ஒன்றாக பகோடா பதத்திற்க்கு பிசையவும்

*கையில் எடுத்துப் பார்த்தால் கொஞ்சம் பொலபொலனு இருக்கனும்.

*கடாயில் எண்ணெயை காயவைத்து மாவை பகோடாவாக பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.


5 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

மீன் பக்கோடா புதுசாக இருக்கு. நான் கட்டாயம் செய்து பார்க்கிறேன்.

Menaga Sathia said...

நல்லா இருக்கும்பா,செய்து பாருங்க பாயிசா,தங்கள் கருத்துக்கு நன்றி!!

ஸாதிகா said...

பக்கோடா அசத்தலாக உள்ளது.

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

பகோடா ரொம்ப நல்லாருக்கு.. இப்பவே சாப்பிடணும்போல..

மேனகா உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்..

அன்புடன் ஸ்டார்ஜன்.

http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html

01 09 10