தே.பொருட்கள்:
சுத்தம் செய்த மீன் துண்டுகள் - 10
சின்ன வெங்காயம் - 5
பூண்டுப்பல் - 4
தக்காளி - 1 சிறியது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
புளி கரைசல் - 1 1/2 கப்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
வதக்கி அரைக்க:
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 8
பூண்டுப்பல் - 5
தக்காளி - 1
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
*வெங்காயம்+பூண்டை இரண்டாக நறுக்கவும்.
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வதக்கி அத்துடன் குழம்பு மிளகாய்த்தூளை சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும்.
*புளிகரைசலுடன் அரைத்தவிழுது+உப்பு+மஞ்சள்தூள் கலந்து வைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம்+பூண்டு+தக்காளி சேர்த்து வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்ததும் மீன் துண்டுகளை சேர்க்கவும்.
*வெந்தயத்தை வெறும் கடாயில் வறுத்து பொடித்து மீன் வெந்ததும் குழம்பில் போட்டு இறக்கவும்.
*நல்லெண்ணெயை சூடு செய்து குழம்பில் ஊற்றி கலக்கவும்.
*சூப்பர் மணத்தோடு இருக்கும் இந்த குழம்பு..
37 பேர் ருசி பார்த்தவர்கள்:
ஐ எங்க ஊரு ஐடம்
mouth watering one...
http://www.akilaskitchen.blogspot.com
Are you from Salem too.. Loving this curry. Reminds me of those good old days spent in my parent's hometown
சூபர்ப் மேனகா.. நானுமொரு சமையல் பதிவு எழுதுறேண்டா..ப்ளீஸ் விசிட்..:))
நல்ல வேளை நோன்பு முடிஞ்சதும் படிச்சேன் .இல்லாட்டி என் நிலைமை என்ன ஆகிறது.. சூப்பர்..!
நல்ல வேளை நோன்பு முடிஞ்சதும் படிச்சேன் .இல்லாட்டி என் நிலைமை என்ன ஆகிறது.. சூப்பர்..!
adding garlic paste seems to be the new one. :-)
looks good, thanks for sharing Menaga
மீன் குழம்பு நல்லா இருக்கு .நன்றி !!
மனம் இங்கு வரை வருகிறது மேனகா
சாப்பிடுங்க! சாப்பிடுங்க!!
very nice menaka.
மீனை ஈரோட்ல வாங்கக்கூடாதா? சேலத்துல தான் போய் வாங்கனுமா?
சேலம் மீன் குழம்பு எங்கள் வீட்டின் ஆல் டைம் ஃபேவரிட் :). நேற்று கூட சேய்தேன்.
குழம்பு பார்க்கவே சாப்பிடத் தூண்டுது
மீன் குழம்பு பார்ப்பதற்கே சூப்பரா இருக்கு
parkum pode arumayaga ulladu. migavum arumai
நன்றி எல்கே!!
நன்றி அகிலா!!
நன்றி ராதிகா!! சேலம் சொந்த ஊர் இல்லைங்க.நம்ம ஊரு பாண்டிச்சேரிங்க..
நன்றி தேனக்கா!!
நன்றி ஜெய்லானி!! அடடா பதிவை சீக்கிரம் போட்டிருக்கலாம்னு தோனுது..
நன்றி சித்ரா!!
நன்றி கிருஷ்ணவேணி!!
நன்றி ப்ரியா!!
நன்றி சிநேகிதி!!
நன்றி மருத்துவரே!!
நன்றி அதிரா!!
நன்றி வால்!! வாலு நமக்கு சொந்த ஊர் மற்றும் சென்னை தவிர வேற எந்த ஊரும் தெரியாது.ஆமா சேலத்துக்கு பக்கத்துலயா ஈரோடு இருக்கு??
//சேலத்துக்கு பக்கத்துலயா ஈரோடு இருக்கு??//
60 கிலோமீட்டர் தூரம்
நன்றி கவி!! நானும் சிலமாறுதலுக்கு இந்த மாடலில் செய்வேன்..
நன்றி சசி!!
நன்றி நிலோபர்!!
////சேலத்துக்கு பக்கத்துலயா ஈரோடு இருக்கு??//
60 கிலோமீட்டர் தூரம்// ஓஓ தகவலூகு நன்றி வால்!! அப்போ அடுத்தமுறை ஈரோட்ல மீன் வாங்கி செய்து ஈரோடு மீன் குழம்புன்னு ஒரு பதிவு போட்டுட வேண்டியதுதான்...
//அடுத்தமுறை ஈரோட்ல மீன் வாங்கி செய்து ஈரோடு மீன் குழம்புன்னு ஒரு பதிவு போட்டுட வேண்டியதுதான்... //
போன வாரம் வச்ச மீன் கொழம்பு கூட இன்னும் ஃப்ரிட்ஜுல இருக்கு, ரெசிப்பி கேட்டு சொல்லட்டுங்களா?
wow delicious...
ஹைய்யா...
இந்த வாரம் நம்ம அறையில வச்சிப் பார்த்திட வேண்டியதுதான் (இப்பவே நண்பர் துபாய் போறேன்னு சொல்றாரு... என்ன அர்த்தமுன்னு எனக்கு தெரியலை... கொஞ்சம் பார்சல் கொடுத்துவிடுங்களேன். அவரு துபாய் பயணத்தை நிப்பாட்ட)
////அடுத்தமுறை ஈரோட்ல மீன் வாங்கி செய்து ஈரோடு மீன் குழம்புன்னு ஒரு பதிவு போட்டுட வேண்டியதுதான்... //
போன வாரம் வச்ச மீன் கொழம்பு கூட இன்னும் ஃப்ரிட்ஜுல இருக்கு, ரெசிப்பி கேட்டு சொல்லட்டுங்களா?// ஐயோ வால் சீக்கிரம் கேட்டு சொல்லுங்க..அதுவும் மண்சட்டில வைச்சு சூடு செய்து சாப்பிட இப்பவே என் நாக்கு எச்சில் ஊறுது..நீங்கலாம் கொடுத்து வைச்சவங்க...
நன்றி பிரேமலதா!!
நன்றி சகோ!!நண்பருடைய துபாய் பயணத்தை நிறுத்த மீன் குழம்பு பார்சலா??????? நிஜமாவே பார்சல் செய்துடுவேன்....செய்து பார்த்து சொல்லுங்கள்....
//ஐயோ வால் சீக்கிரம் கேட்டு சொல்லுங்க..அதுவும் மண்சட்டில வைச்சு சூடு செய்து சாப்பிட இப்பவே என் நாக்கு எச்சில் ஊறுது..நீங்கலாம் கொடுத்து வைச்சவங்க..//
மண்சட்டியும் இல்ல மண்ணாகட்டியும் இல்ல! சாதாரணமா ஆக்கியதை தான் ஒரு வாரமா வச்சு என்னை கொன்னுகிட்டு இருக்கா! மீன் கொழம்பு மட்டுமல்ல, எங்க வீட்ல எல்லா கொழம்பும் அப்படி தான் ஒரு வாரத்திற்கு இருக்கும்!
//மண்சட்டியும் இல்ல மண்ணாகட்டியும் இல்ல! சாதாரணமா ஆக்கியதை தான் ஒரு வாரமா வச்சு என்னை கொன்னுகிட்டு இருக்கா! மீன் கொழம்பு மட்டுமல்ல, எங்க வீட்ல எல்லா கொழம்பும் அப்படி தான் ஒரு வாரத்திற்கு இருக்கும்!//
அடக்கடவுளே!!???வாலு எனக்கு ரொம்ப சிரிப்பா வருது..ஏன்ன்னு ஒரு வார்த்தை உங்க வீட்டம்மாவை கேட்கமாட்டீங்களா??
//ஏன்ன்னு ஒரு வார்த்தை உங்க வீட்டம்மாவை கேட்கமாட்டீங்களா?? //
கேட்டேன், நீயே சமைச்சுகோன்னு சொல்றா! :(
//கேட்டேன், நீயே சமைச்சுகோன்னு சொல்றா! :(//அப்போ நீங்களே செய்து உங்க திறமையை காண்பிக்கலாமே??அதை ஒரு பதிவாகவும் போட்டால் பேச்சுலர்ஸ்களுக்கும் பயன்படுமே வால்???
//அப்போ நீங்களே செய்து உங்க திறமையை காண்பிக்கலாமே??அதை ஒரு பதிவாகவும் போட்டால் பேச்சுலர்ஸ்களுக்கும் பயன்படுமே வால்??? //
தற்கொலை முயற்சிங்கிற தலைப்புல தான் பதிவு போடனும், பரவாயில்லையா?
:)
அட அம்புட்டு குழம்பும் எனக்குத்தான்.
super recipe!
நிறைய பேருக்கு செய்வத்தா இருந்தா இந்த முறையில் செய்தால் குழம்பு நல்ல காணும்
Salem meen kuzhambu inga varaikum manakuthu...
//தற்கொலை முயற்சிங்கிற தலைப்புல தான் பதிவு போடனும், பரவாயில்லையா?
:)// ஐயோ வாலு வேணாம் விட்டுடுங்க...
நன்றி அக்பர்!! எல்லா குழம்பும் உங்களுக்குதான் எடுத்துக்குங்க..
நன்றி வானதி!!
நன்றி ஜலிலாக்கா!!
நன்றி ப்ரியா!!
Post a Comment