Tuesday 16 October 2012 | By: Menaga Sathia

இத்தாலியன் ப்ரெட் சூப்/Italian Bread Soup

இந்த சூப் செய்வதற்கு நாம் வேண்டாம் என ஒதுக்கும் ப்ரெட்டின் ஓரங்களில் இருந்து செய்தது.நன்றி ஜெயஸ்ரீ!!

தே.பொருட்கள்

ப்ரெட்டின் ஓரங்கள்(ப்ரவுன் பகுதி/Bread Crust) - 4/5 ப்ரெட்களிலிருந்து
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல் - 3
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1 /பாஸ்தா சாஸ் -3 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்
வெண்ணெய் -1/2  டீஸ்பூன்
தண்ணீர் -3 கப்
ஆரிகனோ - 1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

செய்முறை
*கடாயில் வெண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டுப்பல்+வெங்காயம்+தக்காளி+ப்ரெட்டின் ஓரங்கள் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் 2 கப் அளவு நீர் சேர்த்து 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

*இவற்றை ஆறவைத்து நைசாக அரைத்து மீண்டும் பாத்திரத்தில் உப்பு+மிளகுத்தூள் +ஆரிகனோ +1 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*கெட்டியான பதத்தில் இறக்கவும்.

பி.கு

*ஒரிஜினல் ரெசிபியில் பாஸ்தா சாஸ் சேர்த்து செய்திருந்தாங்க,நான் அதற்கு பதில் தக்காளி சேர்த்து செய்தேன்

*பாஸ்தா சாஸ் சேர்ப்பதாக இருந்தால் ப்ரெட்டின் ஒரங்கள் வதங்கிய பிறகு சாஸ் சேர்த்து கொதிக்கவிடவும்.

*அவர்கள் செய்த அளவிற்கு சூப் நிறம் வரவில்லை,ஒருவேளை சாஸ் சேர்த்து செய்திருந்தால் வந்திருக்கும்னு நினைக்கிறேன்,ஆனாலும் சுவை மிக நன்றாக இருந்தது.

17 பேர் ருசி பார்த்தவர்கள்:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அட... புதுசா இருக்குங்க. தேங்க்ஸ்

மனோ சாமிநாதன் said...

அருமையான சூப் இது மேனகா!

சி.பி.செந்தில்குமார் said...

702* வாழ்த்துகள்

அசைவக்குறிப்பு புரட்டாசி மாசம் போட்டதால் சங்கத்தில் 100 ரூபாய் அபராதம் கட்டவும் ( போன பதிவு)

பொன் மாலை பொழுது said...

தலைப்பை பார்த்ததும் சரிதான் நம்ம மகளிர் அணிகள் கூட அரசியல் பதிவெல்லாம் போடுறாங்களேன்னு வந்தா...... வழக்கம் போல சூப்பு , சாம்பாருதான். இத்தாலி காரங்க வீட்ல இந்த சூப்பு ரொம்ப / அடிக்கடி பண்ணுவாங்களா??

சாதம் வடிச்ச சூடான கஞ்சியிலே சிறிது உப்பும், சமையலுக்கு துருவிய தேங்காய் பூவையும் சேர்த்து கலக்கி மதியம் சாப்பாடுக்கு முன்னர் எப்போதாவது நம்ம அம்மாக்கள் தருவார்கள் குடிக்க.

Akila said...

Wow romba nalla iruku... Bookmarked

ராமலக்ஷ்மி said...

பிரெட் ஓரங்களை வீணாக்காமல் சூப் செய்திடலாம் இனி. நல்ல குறிப்பு.

Shama Nagarajan said...

yummy recipe. Join me in Fast Food event-Vermicilli in my blog.

Divya A said...

Wow yummy soup :)
Brinjal Raita / Eggplant Raita
Inviting You To Join In The South Vs North Challenge - Learn Regional Indian Recipes

divyagcp said...

Hearty and delicious soup..

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல குறிப்பிற்கு நன்றி...

Unknown said...

I also bookmarked it from jeyashree's place. will try it soon. Like it simply.

Prema said...

Delicious soup,luks inviting...

Vimitha Durai said...

Delicious soup.. I loved her recipe too

Asiya Omar said...

Wow! Looks delicious..

Priya Suresh said...

Mazhaiku superaa soup,yummy.

Jaleela Kamal said...

பிரட் ஓரங்களையும் இனி வேஸ்ட் பண்ண தேவையில்லை இல்லையா

M. Shanmugam said...

மிகவும் ருசியான ஒரு சமையல் குறிப்பு போல இருக்கிறது.
நன்றிகள் பல.

Tamil News Service

01 09 10