Showing posts with label சிப்ஸ்/சூப் வகைகள். Show all posts
Showing posts with label சிப்ஸ்/சூப் வகைகள். Show all posts
Saturday, 9 September 2017 | By: Menaga Sathia

நேந்திரங்காய் சிப்ஸ் /Plaintain Chips | Nendran Chips | Kerala Banana Chips |Onam Sadya Recipe

 இந்த சிப்ஸ் செய்ய நன்கு காயாக இருப்பதையே பயன்படுத்தவும்.தோலினை தூக்கி எறியாமல் மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.அடுத்த ரெசிபியில் எப்படி பொரியல் செய்வது என் பார்ப்போம்.

இப்போழுது சிப்ஸ் செய்வதை பார்க்கலாம்..

தே.பொருட்கள்
நேந்திரங்காய் -3
உப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன் + 3/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*சிறிது நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள்தூள்+1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

*நேந்திரங்காயில் கத்தியால் ஆங்காங்கே கீறி தோலினை எடுக்கவும்.
 *3/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்+ நீர் கலந்து தோல் சீவிய காயினை நீரில் 15 நிமிடம் வைக்கவும்.காய் மூழ்குமளவு நீர் இருக்க வேண்டும்.

*பின் காயினை ஈரம் போக நன்கு துடைத்து வைக்கவும்.
 *கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய வைக்கவும்.

*தீயினை குறைந்த அளவு வைத்து,சிப்ஸ் கட்டையால் நேரடியாக காயும் எண்ணெயில் சீவவும்.பின் தீயினை அதிகபடுத்தி வேகவைக்கவும்.
*கரண்டியால் ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு கிளறி விடவும்.
 *சிப்ஸ் வெந்து எண்ணெய் சத்தம் அடங்கும் போது 1 டீஸ்பூன் உப்பு கலந்து நீரினை ஊற்றவும்.
 *மீண்டும் எண்ணெயின் சத்தம் அடங்கியதும் சிப்ஸினை எடுத்து பேப்பர் டவலில் வைக்கவும்.


பி.கு

*சிப்ஸ்க்கு எண்ணெய் நன்றாகவே காய்ந்திருக்க வேண்டும்.

*உப்பு கலந்த நீரினை சூடான எண்ணெயில் ஊற்றும் எண்ணெய் பொங்கும்,கவனமாக செய்யவேண்டும்.

நன்கு ஆறியதும் காற்றுபுகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தவும்.
Monday, 13 February 2017 | By: Menaga Sathia

முடக்கத்தான் கீரை சூப் /Mudakathan Keerai (Balloon Vine) Soup | Soup Recipes

 முடக்கத்தான் கீரையை மாதம் 2 முறை உணவில் சேர்த்துக் கொண்டால் முட்டுவலி,நரம்பு தளர்ச்சி வராது.

இந்த கீரை லேசாக கசப்பு தன்மை கொண்டது.இதனை சூப் போல் குடித்தால் சளி,இருமல் சீக்கிரம் குணமடையும்.

தலைமுடி நன்கு வளரவும் இதனை உபயோகிக்கலாம்.

தே.பொருட்கள்
முடக்கத்தான் கீரை - 1 கப்
மிளகு,சீரகம் -  தலா 1 டீஸ்பூன்
பூண்டுப்பல் -4
நெய் -1 டீஸ்பூன்
நீர் --3 கப்
உப்பு-தேவைக்கு
முடக்கத்தான் கீரை

செய்முறை

*மிளகு+சீரகம்+பூண்டு இன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் நெய் விட்டு பொடித்த மிளகு சீரகத்தினை போட்டு லேசாக வதங்கியதும் சுத்தம் செய்த கீரையை போட்டு வதக்கவும்.


 *3 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
 *பாதியளவு நீர் சுண்டியதும் உப்பு சேர்த்து இறக்கவும்.
*லேசாக கீரையை மசித்து வடிகட்டி சூடாக பருகவும்.
Tuesday, 18 August 2015 | By: Menaga Sathia

தக்காளி சூப் / Restaurant Style Tomato Soup | Soup Recipes


print this page PRINT IT 
தக்காளி சூப்பில் சிறிதளவு பீட்ரூட் சேர்ப்பது ஹோட்டல் சூப் போல‌ நல்ல கலர் கொடுக்கும்.அதிகமாக சேர்த்தால் சூப் பர்ப்பிள் கலரில் மாறிவிடும்.

தே.பொருட்கள்

குக்கரில் வேக வைக்க‌

தக்காளி- 4 பெரியது
பீட்ரூட் துண்டுகள் -1/4 கப்
கிராம்பு -2
பிரியாணி இலை- 1
பட்டை -சிறு துண்டு
பூண்டுப்பல்- 2
நறுக்கிய இஞ்சி- 1/2 டீஸ்பூன்

சூப் செய்ய‌
வெண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்
சோளமாவு -2 டீஸ்பூன்
பால்- 1/4 கப்
உப்பு -தேவைக்கு
மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்

செய்முறை

*குக்கரில் வேகவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தேவைக்கு நீர் ஊற்றி 2 விசில் வரை வேகவைக்கவும்.
*ப்ரெஷர் அடங்கியதும் கிராம்பு,பட்டை,பிரியாணி இலை எடுத்து விட்டு அரைத்து சூப் வடிகட்டியில் வடிகட்டிக் கொள்ளவும்.
*பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் சோளமாவு சேர்த்து சிறுதீயில் இடைவிடாமல் கிளறவும்.
*பச்சை வாசனை போனதும் பாலினை ஊற்றி கட்டியில்லாமல் கலக்கவும்.

*பின் வடிகட்டிய சூப்+உப்பு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.
*பரிமாறும் போது மிளகுதூள் மற்றும் குரூட்டன்ஸ் சேர்த்து பரிமாறவும்.

பி.கு 
*விரும்பினால் வேகவைக்கும் போது 3 சிறிய வெங்காயம் சேர்க்கலாம்.

*இன்னும் சிறப்பாக இருக்க,பரிமாறும் போது க்ரீம் சேர்த்து பரிமாறலாம்.
Sunday, 7 April 2013 | By: Menaga Sathia

கேரட் தக்காளி சூப்/ Carrot Tomato Soup


தே.பொருட்கள்

கேரட் - 1
தக்காளி - 4 பெரியது
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பூண்டுப்பல் - 4
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
ப்ரெஷ் க்ரீம் - தேவைக்கு
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*குக்கரில் வெண்ணெய் போட்டு வெங்காயம்+பூண்டு+கேரட் சேர்த்து வதக்கவும்.

*அதனுடன் தக்காளியை முழுதாக போட்டு நீர் விட்டு 2 விசில் வரை வேகவைக்கவும்.

*தக்காளியை மட்டும் எடுத்து தோலுரித்து அதனுடன் மற்ற வேகவைத்த பொருட்களும் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

*உப்பு+மிளகுத்தூள் சேர்த்து ப்ரெஷ் க்ரீம் சேர்த்து பருகவும்.

பி.கு

*சூப் தண்ணியாக இருந்தால் சிறிது சோளமாவை நீரில் கரைத்து ஊற்றி கொதிக்கவைத்து பருகவும்.
Sending to Vimatha's Hearty n Healthy Event & Easy 2 Prepare in 15 minutes @Aathithyam & Gayathris WTML Event @My homemantra.

Tuesday, 16 October 2012 | By: Menaga Sathia

இத்தாலியன் ப்ரெட் சூப்/Italian Bread Soup

இந்த சூப் செய்வதற்கு நாம் வேண்டாம் என ஒதுக்கும் ப்ரெட்டின் ஓரங்களில் இருந்து செய்தது.நன்றி ஜெயஸ்ரீ!!

தே.பொருட்கள்

ப்ரெட்டின் ஓரங்கள்(ப்ரவுன் பகுதி/Bread Crust) - 4/5 ப்ரெட்களிலிருந்து
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல் - 3
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1 /பாஸ்தா சாஸ் -3 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்
வெண்ணெய் -1/2  டீஸ்பூன்
தண்ணீர் -3 கப்
ஆரிகனோ - 1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

செய்முறை
*கடாயில் வெண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டுப்பல்+வெங்காயம்+தக்காளி+ப்ரெட்டின் ஓரங்கள் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் 2 கப் அளவு நீர் சேர்த்து 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

*இவற்றை ஆறவைத்து நைசாக அரைத்து மீண்டும் பாத்திரத்தில் உப்பு+மிளகுத்தூள் +ஆரிகனோ +1 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*கெட்டியான பதத்தில் இறக்கவும்.

பி.கு

*ஒரிஜினல் ரெசிபியில் பாஸ்தா சாஸ் சேர்த்து செய்திருந்தாங்க,நான் அதற்கு பதில் தக்காளி சேர்த்து செய்தேன்

*பாஸ்தா சாஸ் சேர்ப்பதாக இருந்தால் ப்ரெட்டின் ஒரங்கள் வதங்கிய பிறகு சாஸ் சேர்த்து கொதிக்கவிடவும்.

*அவர்கள் செய்த அளவிற்கு சூப் நிறம் வரவில்லை,ஒருவேளை சாஸ் சேர்த்து செய்திருந்தால் வந்திருக்கும்னு நினைக்கிறேன்,ஆனாலும் சுவை மிக நன்றாக இருந்தது.
Sunday, 7 October 2012 | By: Menaga Sathia

மார்கண்டம் சூப் /Markandam Soup

மார்கண்டம் என்பது ஆட்டின் நெஞ்செலும்பு பகுதி.குழந்தைகளுக்கு இதில் சூப் செய்து கொடுப்பது நல்லது.

தே.பொருட்கள்

மார்கண்டம் -1/4 கிலோ
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 1/2
நறுக்கிய தக்காளி - 1
மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - காரத்திற்கேற்ப
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
*குக்கரில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+தூள்வகைகள்+மார்கண்டம் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் 2 அல்லது 3 கப் நீர்+உப்பு சேர்த்து 3 அல்லது 4 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

*பின் சீரகம்+கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். மிளகுத்தூள் சேர்த்து சிறிது கொதித்ததும் இறக்கவும்.

*சூடாக பரிமாற நன்றாக இருக்கும்.


Monday, 30 July 2012 | By: Menaga Sathia

வாழைத்தண்டு சூப் /Banana Stem Soup


தே.பொருட்கள்

வாழைத்தண்டு - நடுத்தர அளவு
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன் குறைவாக
ஆலிவ் எண்ணெய் - 1/2  டீஸ்பூன்
பொடியாக அரிந்த பூண்டுப்பல் -1
மிளகுத்தூள் - 1டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
*வாழைத்தண்டை நார் நீக்கி அரிந்து 4 கப் நீர் ஊற்றி அரைத்து சாறெடுத்து வடிக்கட்டவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி மஞ்சள்தூள்+பூண்டுப்பல்லை சேர்த்து வதக்கி உப்பு+வாழைத்தண்டு சாறை ஊற்றி 1 கொதி வரும் போது இறக்கவும்.

*மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

பி.கு

கிட்னியில் கல் இருப்பவர்களுக்கும்,உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் வாழைத்தண்டு மிக நல்லது.
Thursday, 10 November 2011 | By: Menaga Sathia

வாழைக்காய் சிப்ஸ்/ Raw Banana Chips


தே.பொருட்கள்:

வாழைக்காய் - 1
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


செய்முறை :

*வாழைக்காயை தோல் சீவி வட்டமாக நறுக்கவும்.

*சிறிது தண்ணீரில் உப்பு+மஞ்சள்தூள் கலந்து வைக்கவும்.

*எண்ணெய் காயவைத்து வாழைக்காயை போட்டு பொரிக்கவும்.நிறம்மாறும் போது உப்பு கலந்த நீரை சிறிது ஊற்றவும்.

*சலசலப்பு அடங்கியதும் வாழைக்காயை எடுக்கவும்.

Tuesday, 23 November 2010 | By: Menaga Sathia

பாதாம் சூப் / Almond Soup

கீதா பாலகிருஷ்ணன் அவர்களின் குறிப்பை புத்தகத்தில் பார்த்து செய்தது.

பாதாம் பருப்பில் நிறைய புரதசத்து,நார்ச்சத்து,வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைய இருக்கு.ஒமேகா3,6 கொழுப்பு சத்து நிறைந்தது.இந்த கொழுப்பு சத்தின் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க வல்லது.ரத்த ஓட்டத்தை சீர்படுத்தவும்,எலும்பை வலுப்படுத்தவும் சிறந்தது.தோலுக்கும் மிக நல்லது.இதயத்திற்க்கு மிகவும் நல்லது.

தே.பொருட்கள்:பாதாம் - 50 கிராம்
பால் - 1 கப்
வெள்ளை மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
குரூட்டன்ஸ் - சிறிது
காய்கறி வேகவைத்த நீர் - 1/2 கப்
உப்பு - தேவைக்கு

ஒயிட் சாஸ் செய்யவெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
பால் - 1 கப்

செய்முறை:*பாதாம் பருப்புகளை கொதிநீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்தபின் தோலெடுத்து நைசாக அரைக்கவும்.

*கடாயில் வெண்ணெய் விட்டு ,குளிந்த பாலில் கோளமாவு+மைதா மாவு கலவையைக் கரைத்து அதில் சேர்த்து கெட்டியாகிவிடாமல் கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும்.

*சற்று கெட்டியானதும் ஒயிட் சாஸ் ரெடி!!

*பாலை கொதிக்கவிட்டு பாதாம் விழுதை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

*பாதாம் விழுது பாலில் வெந்த வாசம் வந்ததும் காய்கறி நீர்+ஒயிட் சாஸ்+உப்பு+மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

*பரிமாறும் போது குரூட்டன்ஸ் தூவி பருகவும்.சுவையான சூப் ரெடி!!

*1 கப் குடித்தாலே வயிறு நிறைந்துவிடும்.

Sunday, 3 October 2010 | By: Menaga Sathia

பார்லி சூப்/Barley Soup

தே.பொருட்கள்:பார்லி - 3/4 கப்
விருப்பமான காய்கள் - 1/2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+வெண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*பார்லியை 1/2 மணிநேரம் 2 கப் நீரில் ஊறவைத்து அந்த நீருடனேயே குக்கரில் 5 விசில் வரை வேகவைக்கவும்.வெந்ததும் பார்லியை வடிகட்டவும்.1 கைப்பிடி வேகவைத்த பார்லியை மட்டும் அரைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம்+காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.வதங்கியதும் பார்லி வேகவைத்த நீர் +உப்பு சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் பாதி வேகவைத்த பார்லி + அரைத்த பார்லி அனைத்தையும் ஒன்றாக கலந்து மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

பி.கு:
அவரவர் விருப்பப்படி அனைத்தையும் ஒன்றாக வேகவைத்து அரைத்தும் செய்யலாம்.
Sunday, 18 July 2010 | By: Menaga Sathia

கினோவா(Quinoa) சூப்

தே.பொருட்கள்:

வேகவைத்த கினோவா - 1/2 கப்
விருப்பமான காய்கறிகள் - 1/2 கப்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
பொடியாக அரிந்த பூண்டுப்பல் - 2
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :
*காய்களை சிறிது உப்பு+1 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*பாத்திரத்தில் பட்டர் போட்டு வெங்காயம்+பூண்டுப்பல் வதக்கி வேக வைத்த காய்கறிகள்+கினோவா +1/4 கப் நீர் சேர்த்து லேசாக கொதிக்கவிட்டு இறக்கி மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.
 
பி.கு:
*கினோவா,வேகவைத்த காய்கறியில் உப்பு இருப்பதால் உப்பை தேவையானால் மட்டும் சேர்க்கவும்.நான் சேர்த்திருக்கும் காய்கள் பட்டாணி,கேரட்,பீன்ஸ்.
Monday, 5 July 2010 | By: Menaga Sathia

மிக்ஸட் சூப்

தே.பொருட்கள்:

பச்சை சுண்டைக்காய்,மஞ்சள் பூசணிக்காய்,ப்ரோக்கலி - தலா1/4 கப்
நறுக்கிய வெங்காயம் - 1/2
நறுக்கிய தக்காளி - 1
பூண்டுப்பல் - 2
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டர் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
குரூட்டன்ஸ் - அலங்காரத்துக்கு

செய்முறை :
*சுண்டைக்காயை+பூசணிக்காய்+ப்ரோக்கலி சிறிது பட்டரில் லேசாக வதக்கவும்.

*அதனுடன் வெங்காயம்+தக்காளி+பூண்டுப்பல்+உப்பு+மீதமுள்ள பட்டர்+2 கப் நீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.

*ஆறியதும் அரைத்து மிளகுத்தூள்+குரூட்டன்ஸ் சேர்த்து பரிமாறவும்.

*குரூட்டன்ஸ் என்பது பட்டரில் பொரித்த ப்ரெட் துண்டுகள்...
Thursday, 1 April 2010 | By: Menaga Sathia

பச்சை சுண்டைக்காய் சூப்

சுண்டைக்காய் சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள பூச்சிகள்,அழியும்.குடற்புண்களை ஆற்றும்.இந்த சூப் கொஞ்சம் கூட கசப்பே இருக்காது.
 
தே.பொருட்கள்:
பச்சை சுண்டைக்காய் - 1 கப்
பாசிபருப்பு -1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1/2
நறுக்கிய தக்காளி - 1
பூண்டுப்பல் - 2
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டர் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
குரூட்டன்ஸ் - அலங்காரத்துக்கு
 
செய்முறை :

*சுண்டைக்காயை சிறிது பட்டரில் லேசாக வதக்கவும்.

*அதனுடன் வெங்காயம்+தக்காளி+பூண்டுப்பல்+உப்பு+மீதமுள்ள பட்டர்+பாசிபருப்பு+2 கப் நீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.

*ஆறியதும் அரைத்து மிளகுத்தூள்+குரூட்டன்ஸ் சேர்த்து பரிமாறவும்.

*குரூட்டன்ஸ் என்பது பட்டரில் பொரித்த ப்ரெட் துண்டுகள்...

Monday, 29 March 2010 | By: Menaga Sathia

பூசணிக்காய் சூப்

தே.பொருட்கள்:
மஞ்சள் பூசணிக்காய் துண்டுகள் - 1 கப்
அரிந்த வெங்காயம் - 1
பூண்டுப்பல் - 2
அரிந்த தக்காளி - 1
பட்டர் -1 டேபிள்ஸ்பூன்
ப்ரெட் துண்டுகள் -1/4 கப்
காய் வேகவைத்த நீர் - 1 கப்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :

*பூசணி+வெங்காயம்+பூண்டு+தக்காளி+காய் வேக வைத்த நீர்+1 கப் நீர்+உப்பு+சிறிது பட்டர் சேர்த்து நன்கு வேக வைத்து அரைக்கவும்.

*மீதமுள்ள பட்டரில் ப்ரெட் துண்டுகளை பொரிக்கவும்.

*அரைத்த கலவையில் மிளகுத்தூள் சேர்த்து ப்ரெட் துண்டுகளால் அலங்கரித்து பரிமாறவும்.
Friday, 26 March 2010 | By: Menaga Sathia

கத்திரிக்காய் சிப்ஸ்(அவன் செய்முறை)/ Eggplant (Brinjal) Chips

தே.பொருட்கள்:
பெரிய கத்திரிக்காய் - 1
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்
அரிசிமாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*கத்திரிக்காயை வட்டமாக நறுக்கி மேற்கூறிய பொருளில் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து 10 நிமிடம் வைக்கவும்.

*அவனை 190 டிகிரிக்கு முற்சூடு செய்து,அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து எண்ணெய் தடவி கத்திரிக்காய் வைத்து ஆயில் ஸ்ப்ரே செய்யவும்.

*அவனில் 10 நிமிடம் வைத்து மறுபுறம் திருப்பி ஆயில் ஸ்ப்ரே செய்து 10 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*சுவையான சிப்ஸ் தயார்!!
01 09 10